சென்னையில் துவங்கியது சிம்பு படத்தின் சூட்டிங்.. அடுத்தக்கட்டமா எங்க போறாங்க தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் சிம்பு. படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் சிம்பு, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம்

சிம்புவின் மாநாடு படம்

நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த படம் மாநாடு. இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வசூலை பெற்றது. படத்தில் டைம் லூப் பாணியிலான கதையை பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்த நிலையில், இந்தப் படமும் வெற்றிப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளன. படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் இணைந்துள்ளார் சிம்பு. இந்தப் படம் வரும் டிசம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் துவங்கிய சூட்டிங்

சென்னையில் துவங்கிய சூட்டிங்

இதையொட்டி தற்போது படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இந்த சூட்டிங்கில் சிம்புவுடன் படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த சூட்டிங் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

பெல்லாரியில் இறுதிக்கட்ட சூட்டிங்

பெல்லாரியில் இறுதிக்கட்ட சூட்டிங்

தொடர்ந்து படக்குழு பெல்லாரியில் இறுதிக்கட்ட சூட்டிங்கை நடத்தவுள்ளது. இந்த சூட்டிங் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாகவும் அதையடுத்து படத்தின் பிரமோஷன்களை படக்குழு துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X