Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிறுத்தி வைக்கப்பட்ட சிம்பு படத்தின் சூட்டிங்.... இன்னும் சில தினங்களில் துவங்க இருக்காம்!
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரிலீசான மாநாடு படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
இதையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. படம் விரைவிலேயே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏழை குழந்தைகளின் படிப்பில் அக்கறை காட்டிய விஜய், சிம்பு... ராகவா லாரன்ஸ் சொன்ன தகவல்!
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு அடுத்தடுத்த சிறப்பான கதைத்தேர்வை மேற்கொண்டு வருகிறார். கமர்சியல், மசாலா படங்களில் நடித்து அதிகமான அலப்பறையுடன் படங்களை கொடுத்து வந்த அவரது செயல்பாடுகளில் சமீபத்தில் முதிர்ச்சி காணப்படுகிறது. சிறப்பான இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மாநாடு படம்
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியானது மாநாடு படம். படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார், கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாகியிருந்தார். கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் இந்தப் படம் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது.
டைம் லூப் பாணியிலான கதை
டைம் லூப் பாணியிலான இந்தக் கதையை சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் சிறப்பாக எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து அவருக்கு பாராட்டுக்களையும் பட வாய்ப்புகளையும் குவித்து வருகிறது.
வெந்து தணிந்தது காடு படம்
இதனிடையே தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் மற்றும் காலத்துக்கும் நீ வேணும் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
பத்து தல படத்தின் சூட்டிங்
படத்தில் கிராமத்து இளைஞனாகவும் சிம்பு நடித்துள்ளார். பல கெட்டப்புகளை போட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு சில போஸ்டர்களின் மிகவும் ஒல்லியான சிம்புவை பார்க்க முடிகிறது. படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு விரைவில் இணையவுள்ளார்.
முப்தி படத்தின் ரீமேக்
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான முப்தி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் டானாக சிவராஜ்குமார் வலுவான கேரக்டரில் நடித்திருப்பார். படம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தற்போது தமிழில் சிம்பு நடிப்பில் இந்தப் படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
எம்ஜிஆர் கேரக்டரில் சிம்பு
படத்தில் எம்ஜிஆர் என்ற கேரக்டரில் சிம்பு நடித்து வருகிறார். இதற்காக உடல் எடையை மீண்டும் கூட்டி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது.
மஹா படம் ரிலீஸ்
ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக சிம்பு, ஹன்சிகாவுடன் நடித்துள்ள மஹா படமும் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?