சிம்புவின் பத்து தல செய்த சாதனை.. ரசிகர்கள் உச்சபட்ச கொண்டாட்டம்

சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் டீசர் யூட்யூபில் இதுவரை 1 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

நடிப்பு, நடனம், இயக்கம், பாடல் பாடுவது, பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் சிம்பு. ஆனால், இடையில் அவர் சில பிரச்னைகளை சந்திக்க சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தீவிர உடற்பயிற்சி செய்து உடலை சரிசெய்து, எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ரீ எண்ட்ரி கொடுத்தார் சிம்பு.

மாநாடு மூலம் கம்பேக்

மாநாடு மூலம் கம்பேக்

இதனையடுத்து அவர் நடித்த ஈஸ்வரன் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து வெளியான படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மாநாடு கொடுத்த வெற்றி சிம்புவுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்

வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்

மாநாடு படத்தை அடுத்து கௌதம் வாசுதே இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. ஜெயமோகன் எழுதிய சிறுகதையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. மேலும் சிம்புவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவர் உண்மையில் பெரும் நடிகன்தான் என சமூக வலைதளத்தில் கூறினர்.

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல

இப்படி ரீ எண்ட்ரியில் நடித்த முதல் இரண்டு படங்களும் ஹிட்டாக தற்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். சிவராஜ்குமார் ந்டிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபலி கிருஷ்ணா இயக்கிறார். இப்படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். அவருடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படமானது மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

பத்து தல படத்தின் டீசர்

பத்து தல படத்தின் டீசர்

படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதற்கிடையே படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. டீசரை வெகுவாக பாராட்டிய ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பத்து தல டீசரை யூட்யூபில் இதுஅரை ஒரு கோடி பேர் பார்த்திருக்கின்றனர். டீசர் வெளியாகி 4 நாள்கள்தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார். இதற்கு முன்னதாக தொட்டி ஜெயா, வெந்து தணிந்தது காடு படங்களில் அவர் கேங்ஸ்டராக நடித்திருந்தார். எனவே அந்தப் படங்கள் போல இந்தப் படமும் பெரிய வரவேற்பைப் பெறும் என சிம்பு ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X