'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல
Recommended Video

சென்னை: சிம்புவின் பெரியார் குத்து பாடலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ரிபெல் ஆடியோ என்ற நிறுவனத்திற்காக சிம்பு ஒரு ஆல்பத்தில் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய பாட்டுக்கு சிம்பு பாடி டான்ஸ் ஆடியுள்ளார். பெரியார் குத்து என்கிற அந்த பாடல் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாட்டு
பெரியார் குத்து பாடலில் நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதமே காலி, உன் மதத்தை மூட்டை கட்டி தூக்கி எறி, வெட்கத்தை மானத்தை ரோஷத்தை கூட நீ ஆதாரில் இணைக்கணும் என்கிற வரிகள் வருகின்றன. சிம்பு, இப்படி எல்லாம் பாடினால் பிரச்சனை வரும் என்று உங்களுக்கு தெரியாதா கண்ணா?

தலைவன்
ஓட்டுக்கு தலைவனும், நோட்டுக்கு தொண்டனும் கையேந்தி தான் நிற்கணும், ஆட்சியை புடிச்சிட தாவியும், கூவியும், பல்ட்டி தான் அடிக்கணும், கிழவன் சிலையை உடைக்கும் கழுதை என்ன செஞ்சு கிழிக்கும் என்று பாடல் வரிகள் உள்ளன. அய்யோ சிம்பு, இப்பத் தான் பிரச்சனை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலா?
கிண்டல்
உண்மையான நாய் அது நன்றியோட கெடக்கும், அட வேஷம் போட்டு வந்த நாய் மானங்கெட்டு கொரைக்கும் என்று பாடி சிம்பு ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்க. அதில் இருந்தே அந்த நாய் யார் என்பது தெரிகிறது.
மாஸ்
பெரியார் குத்து பாடலை கேட்டுவிட்டு சிம்பு ரசிகர்கள் எல்லாம் மாஸ், மரண மாஸ், தெறி என்கிறார்கள். எல்லாம் சரி கூடவே பிரச்சனையும் வரும் போலயே.


Click it and Unblock the Notifications











