ஒரே கல்லில் ரெண்டு மாங்கா? சிம்பு போட்ட மாஸ்டர் பிளான்... மாட்டித் தவிக்கும் கௌதம் மேனன்!

சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் வெந்து தணிந்தது காடு.

இந்தப் படத்தையடுத்து பத்து தல, கொரோனா குமார் படங்களில் கவனம் செலுத்துகிறார் சிம்பு.

இந்நிலையில் தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் நோக்கத்தில் சிம்புவின் செயல்பாடு காணப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

நடிகர் சிம்பு லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களே சூட்டிங் பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் படக்குழு முடுக்கி விட்டுள்ளது.

பத்து தல எடிட்டரின் செயல்

பத்து தல எடிட்டரின் செயல்

இம்மாதத்தின் துவக்கத்தில் பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு பங்கேற்பார் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆயினும் வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் தாமதமானதால் சிம்பு பத்து தல சூட்டிங்கில் பங்கேற்க முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் பத்து தல படத்தின் எடிட்டர் செய்த செயலால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

வீடியோ அனுப்பிய எடிட்டர்

வீடியோ அனுப்பிய எடிட்டர்

பத்து தல படத்தின் எடிட்டர் பிரவீன் அந்தப் படத்தை சிறிய வீடியோவாக எடிட்டிங் வொர்க் செய்து அதை சிம்புவிற்கு அனுப்பிய நிலையில் அதைப்பார்த்து மிரண்டு போயிருக்கிறார் சிம்பு. அந்த வீடியோ வேற லெவலில் மாறாக இருப்பதாக கூறி தன்னுடைய கால்ஷீட்டை ஏப்ரல் மாதத்தில் மட்டும் 22 நாட்கள் ஒதுக்கியுள்ளார்.

மிரண்டு போன சிம்பு

மிரண்டு போன சிம்பு

சிறிய வீடியோ ஒன்றை அனுப்பி சிம்புவை தட்டித் தூக்கியுள்ளது பத்து தல படக்குழு. இதனால் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பத்து தல சூட்டிங்கில் சிம்பு கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டுதான் மீண்டும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக பெரிய தாடி வைத்து நடிக்க வேண்டிய நிலையில் அதை வளர்த்து வருகிறார் சிம்பு. இதே போல பத்து தல படத்திலும் அவர் தாடியுடன் நடித்து வருவதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் தாடியை வளர்த்து நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு.

கௌதம் மேனன் தவிப்பு

கௌதம் மேனன் தவிப்பு

ஆயினும் வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் தற்போது தாமதமாகியுள்ளதால் கௌதம் மேனன் தற்போது தவித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கால்ஷீட் பிரச்சினைகளில் சிக்கி விமர்சனங்களை வாங்கிய சிம்பு, தற்போது முறையாக பராமரித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரண்டு படங்களுக்கிடையில் மீண்டும் கால்ஷீட் பிரச்சினை தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X