For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    “கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை

    |
    Simbu's request: ரசிகர்களுக்கு சிம்பு வைக்கும் கோரிக்கை

    சென்னை: வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட ரிலீஸின் போது ரசிகர்கள் என்னென்ன விசயங்கள் செய்ய வேண்டும், எதை எதை செய்யக் கூடாது என்பது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    செக்கச் சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்'. லைகா தயாரித்துள்ள இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படம் அடுத்தமாதம் முதல் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிம்பு வீடியோ:

    சிம்பு வீடியோ:

    இந்நிலையில், படத்தின் ரிலீஸை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் தனது ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

    ரசிகர்களுக்கு கோரிக்கை:

    ரசிகர்களுக்கு கோரிக்கை:

    அந்த வீடியோவில் அவர், "வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.

    கட் அவுட் வேண்டாம்

    அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள். ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம்.

    போட்டோ அனுப்புங்கள்:

    போட்டோ அனுப்புங்கள்:

    அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தாருங்கள், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் வாங்கித் தந்து மகிழ்ச்சி அடைய செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் வாங்கித் தருவது புகைப்படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும்.

    பொங்கல் வாழ்த்துக்கள்:

    பொங்கல் வாழ்த்துக்கள்:

    திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை நான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும். என் ரசிகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என இவ்வாறு அதில் ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் சிம்பு.

    இது தான் காரணம்:

    இது தான் காரணம்:

    சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஸ்வாசம் பட ரிலீசின் போது கட் அவுட்டில் ஏறி ரசிகர்கள் அஜித் படத்திற்கு பாலாபிஷேகம் பண்ணியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே இதேபோன்ற சம்பவம் சிம்பு பட ரிலீசின் போதும் நடைபெற்றது. இவற்றை மனதில் வைத்து தான் சிம்பு இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

    English summary
    Actor Simbu has requested his fans to avoid keeping banner and buying tickets in huge rate.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more