எங்க ரத்தம் முழுக்க சிம்பு தான்.. ரீ ரிலீசில் பட்டையை கிளப்பும் சிலம்பாட்டம்!

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு படையப்பா திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. இதையடுத்து அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆனது. தற்போது, சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பாட்டம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வசூலை அள்ளி வருகிறது.

Simbu Silambattam Re Release fans Review

சிம்பு தான் எல்லாம்: இந்நிலையில் தியேட்டரில் சிலம்பாட்டம் பார்த்தை எஸ்.டிஆரின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருகின்றனர். படம் பார்த்த சிம்புவின் தீவிர ரசிகை ஒருவர். நான் எஸ்.டி.ஆரின் தீவிர ரசிகை. சின்ன வயதில் இருந்தே நான் சிம்புவின் ரசிகை. சிலம்பாட்டம் படம் பார்க்கும் போது நான் இருக்கையிலேயே அமரவில்லை எழுந்து பயங்கரமாக ஆட்டம் போட்டேன். என் போனின் வால்பேப்பர், ஸ்கிரீன்ஷாட் அனைத்திலும் எஸ்டிஆரின் படம் தான் இருக்கும். என் நாடி நரம்பு, ரத்தம் என அனைத்திலும் சிம்பு தான். எத்தனை நடிகர்கள் வந்தாலும் என்றும் நான் அவரின் ரசிகை தான் என்றார்.

Simbu Silambattam Re Release fans Review

நல்ல மனிதர்: மற்றொரு ரசிகர்கள், எல்லாரும் படம் பார்த்து ரசிகராவார்கள். ஆனால், நான் அவர் பேசியதை கேட்டு அவரின் ரசிகனாக மாறிவிட்டேன். அவரை பார்க்கும் போதே, கூஸ்பம்ஸ் போல இருக்கும். அவர் எப்போதுமே உண்மையான நேர்மையானவராக இருக்கிறார். அவரிடம் ஈகோவே இல்லை, எந்த புது நடிகர்களின் படம் வந்தாலும் வாழ்த்து சொல்கிறார். அவரை பற்றி யாராவது தவறாக சொன்னால் கூட, அவரை பற்றியே புகழ்ந்து சொல்லக்கூடியவர் சிம்பு. இந்த காரணத்திற்காகவே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றார்.

தரமான படம்: படம் பார்த்த மற்றொரு ரசிகர்கள் சிலம்பாட்டம் படத்தை மீண்டும் தியேட்டரில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு புது படம் வெளியாகும் போது எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அதுப்போலத்தான் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். இந்த படத்தில் யுவன் ராஜா இசையில் பட்டையை கிளப்பி இருப்பார், ரீ ரிலீசுக்கு ஏற்ற தரமான படம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X