நடு விரல் காட்டும் சிம்பு.. டெனெட் படம் மாதிரி குழப்பும் மாநாடு டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: மாநாடு படத்தின் டீசரை பார்த்த உடனே நெட்டிசன்கள் டெனெட் படத்தின் காப்பி தான் இந்த படம் என கலாய்த்துத் தள்ளிய நிலையில், மாநாடு டிரைலரிலேயே அந்த படத்தைப் பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆனாலும், தமிழ் சினிமாவில் இதற்கு முன் எடுக்காத வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை எடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்தை உருவாக்கி இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிரைலரின் இறுதியில் சிம்பு நடுவிரலை காட்டும் அந்த காட்சி வேற லெவல் கைதட்டலை தியேட்டரில் பெறும் என்றும் ரசிகர்கள் இப்பவே அடித்து சொல்லி வருகின்றனர்.

மாநாடு டிரைலர்

மாநாடு டிரைலர்

சிம்புவின் மாநாடு டிரைலர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான டெனெட் திரைப்படம் போலவே இந்த படம் இருப்பதாக படத்தின் டீசர் வெளியான போதே விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் இந்த படத்தில் உள்ளது என்பதை படக்குழுவே வசனம் மூலம் உணர்த்தி உள்ளனர்.

டைம் லூப்

டைம் லூப்

சமீபத்தில் அமலா பால் நடிப்பில் தெலுங்கில் வெளியான குடி எடமாயித்தே வெப் சீரிஸ் டைம் லூப் கான்செப்ட்டில் உருவான நிலையில், அதே போன்ற ஒரு டைம் லூப் திரைப்படமாக சிம்புவின் மாநாடு உருவாகி உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் அப்பா முதல்வர்

விஜய் அப்பா முதல்வர்

இயக்குநரும் விஜய் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த மாநாடு படத்தில் தமிழ்நாட்டு முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை நெத்திப் பொட்டிலேயே சுடும் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்திருப்பது சர்ச்சையை கிளப்பும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், மறுபடியும் மறுபடியும் மாநாட்டில் சிம்பு நெற்றிப் பொட்டில் முதலமைச்சரை சுடுகிறார் என்றதும் ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்

எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு வேற லெவல் என டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இருக்கு ஆனா இல்லை என குழப்பிய எஸ்.ஜே. சூர்யாவையே குழம்பிப் போய் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்தி உள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அண்ணாத்த உடன் மோதல்

அண்ணாத்த உடன் மோதல்

வரும் தீபாவளி பண்டிகைக்கு மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என டிரைலரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு படங்களுக்கு இடையே தியேட்டரில் செம கிளாஷ் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சூர்யாவின் ஜெய் பீம் ஒடிடியில் வெளியாகிறது.

நடு விரல் காட்டும் சிம்பு

விரலை வைத்து வித்தைக் காட்டுபவர் சிம்பு என்பது தம் படத்தில் இடம்பெற்ற "கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்' பாடலில் இருந்தே ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். இந்நிலையில், அவரது டிரேட் மார்க்கான விரல் வித்தையை வைத்து நடுவிரல் காட்டும் காட்சி டிரைலரின் கடைசியில் இடம்பெற்று இருப்பது புதிய சர்ச்சைகளை கிளப்புமா? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

அல்லாவும் சிவனும்

அல்லாவும் சிவனும்

ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் தனது பங்கிற்கு "அல்லாவும் சிவனும் இணைந்து உங்க மூலமா எதையோ செய்ய நினைக்கிறாங்க போல" என்றும் கூறும் வசனமும் மாநாடு டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு வித்தியாசமான சிம்பு படமாக மாநாடு இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X