ப்பா.. இவ்ளோ சீன்ல கோ படத்துல சிம்பு நடிச்சிருக்காரா.. தாறுமாறாக வைரலாகும் ஸ்டில்ஸ்!

சென்னை: கோ படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால், சில பல காரணங்களுக்காக தன்னால் நடிக்க முடியவில்லை என இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவின் போது நடிகர் சிலம்பரசன் உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது கோ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்த காட்சிகளின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகின்றன.

நடிகர் சிம்புவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் எப்படி மிஸ் ஆனது புரியாமல் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

கே.வி. ஆனந்த் மரணம்

கே.வி. ஆனந்த் மரணம்

அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என வித்தியாசமான படங்களை கொடுத்து ஹிட் அடித்த இயக்குநர் கே.வி. ஆனந்த், கடந்த ஏப்ரல் 30ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிம்பு இரங்கல்

சிம்பு இரங்கல்

இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு செய்தியை அறிந்த நடிகர் சிலம்பரசன், தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கல் கடிதத்தை பதிவிட்டு இருந்தார். அதில், கோ படத்தில் ஹீரோவாக நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

அடுத்த படத்தில்

அடுத்த படத்தில்

மேலும், மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து மின்னல் வேகத்தில் நடித்து வரும் சிம்பு, மீண்டும் ஒரு புதிய படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற இருந்தேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருந்தன. ஆனால், அதற்குள் அவர் காலமாகி விட்டார் என கண்ணீர் மல்க அஞ்சலி தெரிவித்தார்.

கோ ஸ்டில்ஸ்

கோ ஸ்டில்ஸ்

இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கோ படத்தில் சிம்பு நடித்த காட்சிகள் அடங்கிய பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி படு வைரலாகி வருகின்றன. நடிகர் அஜ்மல் மற்றும் நாயகி கார்த்திகா நாயருடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்த சிம்பு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மிஸ்ஸான வெற்றி

மிஸ்ஸான வெற்றி

விண்ணைத்தாண்டி வருவாயா படம் முடித்த கையோடு இந்த படத்தில் நடிகர் சிம்பு கமீட் ஆகி உள்ளார் என்பது தற்போது வெளியாகி உள்ள போட்டோக்களை பார்த்தாலே தெரிகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து இன்னொரு பெரிய வெற்றியை சிம்பு எப்படி மிஸ் செய்தார் என ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X