கமல் படத்தை தொடர்ந்து சிம்பு படத்தை கேரளாவில் வெளியிடும் சிபு தமின்ஸ்.. உற்சாகப் பதிவு!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு சர்வதேச அளவில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

விக்ரம் படத்தை கேரளாவில் வெளியிட்ட ஷிபு தமின்ஸ் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டையும் கையில் எடுத்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் இயக்கத்தில் வரும் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அதிகமான அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவை அனைத்தும் இணைந்து ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஹாட்ரிக் வெற்றிக்கு திட்டம்

ஹாட்ரிக் வெற்றிக்கு திட்டம்

அச்சம் என்பது மடமையடா, விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தற்போது இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை வெந்து தணிந்தது காடு படத்தில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு படத்தின் சூப்பர் வெற்றி

மாநாடு படத்தின் சூப்பர் வெற்றி

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இதையடுத்து சிம்புவின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படம் அதை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகாவின் அழுத்தமான கேரக்டர்

ராதிகாவின் அழுத்தமான கேரக்டர்

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் சித்தி இத்னானி. அவருக்கு அம்மாவாக மிகவும் அழுத்தமான கேரக்டரில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். அவர் சமீப காலங்களில் மிகவும் சிறப்பான கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில் அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான இசை வெளியீடு

பிரம்மாண்டமான இசை வெளியீடு

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நடந்தது. சென்னையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அரங்கத்தின் வெளியில் ஹெலிகாப்டர் எல்லாம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கலந்துக் கொண்டனர்.

கேரள விநியோக உரிமை

கேரள விநியோக உரிமை

இந்நிலையில் இந்தப் படத்தின் கேரள விநியோக உரிமையை தற்போது பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஷிபு தமின்ஸ் பெற்றுள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை அவர் பெற்றிருந்த நிலையில், அந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

ஷிபு தமின்ஸ் உற்சாகம்

ஷிபு தமின்ஸ் உற்சாகம்

இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் கேரள விநியோக உரிமையை பெற்றுள்ளது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியுடன் இணைவது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ள அவர், வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்டுடன் இணைவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X