பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்ட சிம்பு படத்தின் இசை வெளியீடு.. தள்ளிப் போக இதுதான் காரணமா?
சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியை அந்தக் குழு தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இதுவரையில் இந்தப் படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது அடுத்தப் படமான வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, கலையரசன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது மாநாடு. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் படத்தில் நடித்த அனைவரது மார்க்கெட் மற்றும் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.

ரூ.117 கோடி வசூல்
இந்தப் படம் 117 கோடிகளை வசூலித்துள்ளதாக படத்தின் தயாராப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். டைம் லூப் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. மேலும் சிக்கல் இல்லாமல் எளிமையான திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

கௌதம் மேனன் படத்தில் சிம்பு
படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா இருவரது நடிப்பும் மிரட்டியது. இவர்கள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. தொடர்ந்து பத்து தல படத்திலும் கவனம் செலுத்தி வந்தார்.

பிரம்மாண்ட இசை வெளியீடு
வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டிருந்தார். விக்ரம் படத்தை போலவே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவிருந்தது.

தள்ளிப்போன இசை வெளியீடு
இந்நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைய தொடர்ந்து இந்த விழா தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிம்புவின் ரசிகர்களுக்கு காத்திருந்த இனிப்பான செய்திகள், டிஆர் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் மஹா படம்
டிஆர் உடல்நலம் தேறியபின்பு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி திட்டமிடப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிம்பு -ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படமும் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிரேக் அப்பிற்கு பிறகு நடித்துள்ள இந்தப் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான கெட்டப்புகள்
வெந்து தணிந்தது காடு படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிம்பு காணப்படுகிறார். படத்தின் டீசர், போஸ்டர்கள், பாடல் என வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











