கமலுக்கு நாயகன்...சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு படமா?

சென்னை : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துவரும் படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவை இந்தப் படத்தில் இயக்கியுள்ளார் கௌதம் மேனன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த வெற்றி

அடுத்தடுத்த வெற்றி

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் அவருக்கு சிறப்பான பெயரை கோலிவுட்டில் பெற்றுத் தந்துள்ளது. அவரது அடுத்தடுத்த படங்களான ஈஸ்வரன், மாநாடு படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. அவரது நடிப்பில் மட்டுமின்றி கதைத்தேர்விலும் முதிர்ச்சி காணப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் அடுத்தடுத்து கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவரது வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பு

ஐசரி கணேஷ் தயாரிப்பு

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் பிளாக்பஸ்டர் கூட்டணியான சிம்பு -கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சூட்டிங் நிறைவு

சூட்டிங் நிறைவு

தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மும்பையில் நிறைவு பெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் இசை வெளியீடு, ரிலீஸ் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.

திசைமாறும் கிராமத்து இளைஞன்

திசைமாறும் கிராமத்து இளைஞன்

ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் மும்பைக்கு செல்லும நிலையில் அவனது வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான திருப்பத்தை படம் கதைக்களமாக கொண்டுள்ளது. படத்தின் சூட்டிங் திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனம்

எழுத்தாளர் ஜெயமோகன் வசனம்

படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் சித்தி இதானி. மேலும் நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் மேனனுடன் இணைந்து படத்தின் வசனங்களை எழுதியுள்ளதும் படத்திற்கான வரவேற்பை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X