மல்லிப்பூ பாட்டோட சூப்பர் வெர்ஷன்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

சென்னை : சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக படத்தின் மல்லிப்பூ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலை பிரபலங்கள் பலரும் வீடியோக்களாக பகிர்ந்து வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

வெற்றிக்கு காரணமான பாடல்கள்

வெற்றிக்கு காரணமான பாடல்கள்

இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது படத்தின் பாடல்கள். படத்தின் இசையமைப்பை ஏஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ள நிலையில், முன்னதாக படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரபலங்களின் விருப்பப்பாடல்

பிரபலங்களின் விருப்பப்பாடல்

குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல், மெலடியாக ரசிகர்களை வெகுவாக பரவசப்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரின் விருப்பத்திற்கும் இந்தப் பாடல் உரியதாக உள்ளது. பலர் இந்தப் பாடலை பாடியும், நடித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமில்லாமல் சாதாரண மக்களும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குட்டிக் குழந்தையின் வீடியோ

குட்டிக் குழந்தையின் வீடியோ

இதனிடையே தற்போது குட்டிக் குழந்தை ஒன்று இந்தப் பாடலுக்கு ஏற்றபடி குளியலறையில் ஆடியபடி குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்புலத்தில் மல்லிப்பூ பாடல் ஒலிக்க அந்த குழந்தை ஆடும் அந்த வீடியோ காண்பவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளதை இந்த வீடியோ மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஏஆர் ரஹ்மானின் ஹிட்லிஸ்ட்

ஏஆர் ரஹ்மானின் ஹிட்லிஸ்ட்

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படமான பத்து தல படத்திற்கும் ஏஆர் ரஹ்மானே இசையமைத்து வரும் சூழலில், அந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். தமிழில் அடுத்தடுத்த வெற்றிப் பாடல்களை ஏஆர் ரஹ்மான் கொடுத்து வருகிறார். பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த ஹிட்களை அவர் ரசிகர்களுக்கு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X