இன்னும் இரு தினங்களில் ஓடிடியில் வெளியாகும் சிம்பு படம்.. படத்தோட டெலிடட் காட்சிகள் இதோ!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தை இயக்குநம் கௌதம் மேனன் இயக்கியிருந்த நிலையில் படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். கிராமத்திலிருந்து மும்பைக்கு செல்லும் அவரது வாழ்க்கையின் மாற்றங்கள் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளன.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் படத்தின் பாடல்கள் வேறு லெவலில் ரசிகர்களை கவர்ந்தது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்

ரசிகர்களை கவர்ந்த பாடல்

குறிப்பாக படத்தின் எப்போ வரப்போற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய கணவனை பிரிந்திருக்கும் பெண்ணின் ஏக்கம் இந்தப் பாடலில் அதிகமாக வெளிப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். இதேபோல படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

பாடல்கள் மட்டுமின்றி படமும் வேறு லெவலில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் கிராமத்து இளைஞனான சிம்புவின் மும்பை பயணம் மற்றும் அதையொட்டிய அவரது வாழ்க்கை மாற்றங்கள் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு தன்னுடைய கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளார்.

21 வயது இளைஞனாக சிம்பு

21 வயது இளைஞனாக சிம்பு

கிராமத்தில் 21 வயது இளைஞனாக சிம்பு உடல் இளைத்து தன்னை தனித்துவமாக காட்டியிருந்தார். அடுத்தது கேங்ஸ்டராக மாறும் அவரது உடல்மொழியும் சிறப்பாக காட்டப்பட்டிருந்தது. படத்தில் நாயகி சித்தி இத்னானி மற்றும் ராதிகா உள்ளிட்டவர்களின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அமேசான் ஓடிடியில் வெளியீடு

அமேசான் ஓடிடியில் வெளியீடு

இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் கவர்ந்துள்ளது. இதனிடையே இந்தப் படம் அடுத்ததாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. தீபாவளியையொட்டியே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை இரவு முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

முன்னதாக சிம்புவின் மாநாடு படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படமும் வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளது. அடுத்ததாக சிம்புவின் பத்து தல படமும் டிசம்பர் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நீக்கப்பட்ட காட்சிகள்

நீக்கப்பட்ட காட்சிகள்

இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டெலிட் காட்சிகள் ஒன்று என்று இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X