சிம்புவின் வெந்து தணிந்தது காடு…அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு !

சென்னை : சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மாஸ் அப்டேட் புத்தாண்டு பரிசாக வெளியாகி உள்ளது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து முடிந்தது.

இதையடுத்து 3ம் கட்டப்படப்பிடிப்பு ஜனவரி 3ந் தேதி முதல் தொடங்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக இந்தப்படத்திற்காக காத்து வருகின்றனர்.

இசை

இசை

வருண் நடிப்பில் ஜோஷ்வா படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், தற்போது சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

புது போஸ்டர்

புது போஸ்டர்

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புது போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக வெளியாகி உள்ள அந்த போஸ்டரில் ஜனவரி 3ஆம் தேதி முதல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும், அதில் முத்துவின் பாவையான சித்திட்ஞானி நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

முதல் படம்

முதல் படம்

மேலும்,அந்த போஸ்டரில், முத்து,பாவை என உள்ளதால், அப்படத்தில் சிம்புவின் பெயர் முத்து என்பதும், ஹீரோயின் பெயர் பாவை என்பது தெரியவந்துள்ளது. சித்திட்ஞானி தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X