மீண்டும் இணையத்தை அலற விட்ட சிம்பு...10 நிமிடத்தில் 15,000 லைக்கள்
சென்னை : சிம்பு நடித்துள்ள மாநாடு படம் எப்போது ரிலீசாகும் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்த மன்மதன் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு போடும் பதிவும் அனைத்தும் தாறுமாறாக வைரலாகி வருகின்றன. காதலர் தினத்தில் நாயிடம் தனக்கு எப்போது கல்யாணம் ஆகும் என புலம்பிய வீடியோ, கங்கையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய போட்டோ, சமீபத்தில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோ வரை அனைத்தும் வைரலாகின.
இந்நிலையில் கையில் பழைய மாடல் நோக்கியா மொபைல் போன் வைத்திருப்பது போன்ற சிறு வயது போட்டோ ஒன்றை இன்று சிம்பு பதிவிட்டுள்ளார். அத்துடன், இது எந்த வருடம் என கண்டுபிடியுங்கள் என கேள்வியும் கேட்டுள்ளார்.
Recommended Video
மீசையில்லாமல் இருக்கும் இந்த சிறு வயது போட்டோவை சிம்பு பதிவிட்ட உடனேயே அவரது ரசிகர்கள் லைக்களையும், கமென்ட்களையும் குவிக்க துவங்கி விட்டனர். பதிவிட்ட 10 நிமிடங்களில் 15,000 லைக்குகளை இந்த போட்டோ பெற்றுள்ளது என்றால் பாருங்களேன்.


Click it and Unblock the Notifications











