தெலுங்கிலும் மாஸ் காட்டிய சிம்பு… ஆஹா... பாட்டு மெர்சலாக இருக்கே!
சென்னை : தி வாரியர் திரைப்படத்தின் புல்லட் என்ற பாடலை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் சிம்பு பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தி வாரியர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தி வாரியர்
விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் தி வாரியர் படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பு
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில், இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிரடி ஆக்ஷன்
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக மிரட்டலான இருந்தார் ராம். தி வாரியர் திரைப்படம் வழக்கமான போலீஸ் கதை அம்சத்தைக் கொண்ட திரைப்படமாக இல்லாமல், பார்வையாளர்கள் ரசிக்கும் படி அதிரடி காட்சிகள் நிறைந்த சுவாரசியமான திரைப்படமாக இருக்கும் என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
மெர்சல் காட்டிய சிம்பு
இந்தப் படத்தில் புல்லட் என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். படக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிம்பு பாடியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பாடல் பதிவின் ஸ்னீப் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், சிம்பு, தெலுங்கில் பாடி மெர்சலாக்கி உள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ 22ந் தேதி மாலை 5.45 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications











