Simbu: சிம்பு படத்தில் நடித்துவிட்டு ரொம்பவே பயந்தேன்... ஆனால் நடந்ததே வேறு... சந்தோஷ் பிரதாப் ஓபன்

சென்னை: சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சிம்புவின் தங்கையாக அனு சித்தாராவும் அவரது கணவராக சந்தோஷ் பிரதாப்பும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 Simbu: Santhosh Prathap shares his experience of acting in Pathu Thala with Simbu

இந்நிலையில் பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்தது பற்றி சந்தோஷ் பிரதாப் மனம் திறந்துள்ளார்.

சிம்புவுடன் நடித்துவிட்டு பயந்தேன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். தொடர்ந்து தாயம், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, கதிர், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்த ராமன் கேரக்டர் அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து சிம்புவின் பத்து தல படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் நடித்திருந்தார். சிம்புவின் தங்கை கணவர், முதலமைச்சர் என இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார் சந்தோஷ் பிரதாப். அருள்நிதி, துஷாரா விஜயன் நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இதில், சந்தோஷ் பிரதாப்பும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சந்தோஷ் பிரதாப் கலந்துகொண்டார். அப்போது பேசிய சந்தோஷ் பிரதாப், கழுவேத்தி மூர்க்கன் தனக்கு முக்கியமான திரைப்படம். இப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் எனத் தெரியாது, ஆனால் அதற்கு முன்பாகவே கழுவேத்தி மூர்க்கன் தயாரிப்பாளர் இப்படத்தில் தனது நடிப்பை பாராட்டியதாக கூறினார்.

 Simbu: Santhosh Prathap shares his experience of acting in Pathu Thala with Simbu

தொடர்ந்து பேசிய சந்தோஷ் பிரதாப், சிம்புவின் பத்து தல படத்தில் ஏன் நடித்தோம் என்ற பயத்துடன் இருந்தேன். ஆனால் இந்தப் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் பாராட்டினார்கள். அதேநேரம் பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்தது பற்றி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தேன் எனக் கூறியுள்ளார். சிம்புவால் தான் பத்து தல படத்தில் நடிக்க பயந்ததாக சந்தோஷ் பிரதாப் கூறியது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இன்று வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர பிசாசு 2, மீண்டும் வா அருகில் வா, தி ரோடு ஆகிய படங்களிலும் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X