Simbu: சிம்பு தான் முதலில் அதை செய்தார்... அயோத்தி பட விழாவில் உண்மையை சொன்ன சசிகுமார்

சென்னை: சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில், சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட அயோத்தி படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் சிம்பு குறித்து சசிகுமார் மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

 Simbu: Sasikumar spoke about Simbu at the Ayothi film 50th Day celebration

சிம்பு குறித்த உண்மையை சொன்ன சசிகுமார்:சசிகுமார் நடிப்பில் மார்ச் 3ம் தேதி வெளியான அயோத்தி திரைப்படம், 50 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது. ஜீ5 ஓடிடியில் வெளியான பின்னரும் தியேட்டர் ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், அயோத்தி படத்தின் 50வது நாள் விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சசிகுமார் சிம்பு குறித்து வெளிப்படியாக பேசியிருந்தார். அதாவது தனது முதல் படமான சுப்ரமணியபுரம் வெளியானதும், என்னை அழைத்து முதலில் பாராட்டியது சிம்பு தான் என்றார். 2008ம் ஆண்டு வெளியானது சுப்ரமணியபுரம், தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்று வரையும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வரும் நிலையில், சிம்பு தான் முதலில் பாராட்டு தெரிவித்தார் என சசிகுமார் கூறியுள்ளது செம்ம வைரலாகி வருகிறது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகும் சசிகுமார் முற்றிலும் புதுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அயோத்தி படத்தையும் முதலில் சிம்பு தான் பாராட்டியதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

அயோத்தி படத்தை பார்த்துவிட்ட இயக்குநர் மந்திரமூர்த்தியை முதலில் அழைத்து பேசியது சிம்பு தான் என சசிகுமார் கூறியுள்ளார். சிம்பு பாராட்டியதை மிக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ள சசிகுமாரின் இந்த பேச்சும் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. திரையுலகில் நல்ல படங்களை முன்னணி நடிகர்கள் பாராட்ட தயக்கம் காட்டி வரும் சூழலில் சிம்புவின் இந்த மூவ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 Simbu: Sasikumar spoke about Simbu at the Ayothi film 50th Day celebration

முன்னதாக அயோத்தி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், "அயோத்தி... நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, ரஜினியின் பாராட்டுக்கு சசிகுமாரும் டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்" என சசிகுமார் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X