»   »  விரைவில் இது நம்ம ஆளு... ட்விட்டரில் உறுதியளித்த சிம்பு

விரைவில் இது நம்ம ஆளு... ட்விட்டரில் உறுதியளித்த சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வழியாக வாலு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியாகி விட்டது, வெளியானதோடு மட்டுமின்றி வெற்றிகரமாகவும் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி வெளியான அனைத்து இடங்களிலும் ஓரளவு நல்ல வசூலை ஈட்டியிருக்கிறது படம், இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு.


வாலுவின் வெற்றி சிம்புவை உற்சாகப்படுத்தி இருக்கிறது எனவே தனது அடுத்தடுத்த படங்களில் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது நம்ம ஆளு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.


வாலு

வாலு

3 வருடங்கள் போராடி வாலுவை வெளிக்கொண்டுவந்து விட்டார் சிம்பு, தற்போது வாலு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரே வாரத்தில் சுமார் 13 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது படம்.


பல இடங்களில் ஹவுஸ்புல்

3 வருடம் போராடி வந்த சிம்புவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து இருக்கின்றனர், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே வாலு திரையிட்ட இடங்களில் 85% திரையரங்குகள் நிரம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஒருசில இடங்களில் படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.


அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது சிம்புவின் கைகளில் இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், அச்சம் என்பது மடமையடா, கான் ஆகிய படங்கள் உள்ளன. இது நம்ம ஆளு திரைப்படம் ஏறக்குறைய முடிந்து விட்டது, செல்வராகவன் இயக்கத்தில் கான் வேகமாக வளர்ந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் ஹிட்டுக்குப் பின் சிம்பு கவுதம் மேனன் மீண்டும் இணைந்து இருக்கும் அச்சம் என்பது மடமையடா, இந்தப் படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த வருட இறுதிக்குள் மேலே சொன்ன படங்களில் 2 அல்லது 3 படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
இது நம்ம ஆளு

முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடித்திருக்கும் இது நம்ம ஆளு திரைப்படம் ஏறக்குறைய முடிந்து விட்டது, இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளன. இந்நிலையில் வாலுவின் வெற்றியால் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது இது நம்ம ஆளு, படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நல்ல செய்தி வரும் என்று அறிவித்திருக்கிறார்.(படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது), இதனை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருக்கிறார்.
இறுதிக்கட்டத்தில் பாடல்கள்

படத்தின் பாடல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, விரைவில் கடவுளின் ஆசிர்வாதங்களுடன் இசை வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி அளித்திருக்கிறார் சிம்பு.


விரைவில் இது நம்ம ஆளு

பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன, இசையை நேசிப்பவர்களுக்கு படத்தின் பாடல்கள் விருந்தாக இருக்கும். ரசிகர்களின் வரவேற்பு பாடல்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறேன், ஆனால் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை.இயக்குநர் பாண்டிராஜ், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் குரளரசன் 3 பேரின் உழைப்பில் உருவாகி இருக்கும் இது நம்ம ஆளு படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று மேலும் கூறியிருக்கிறார் சிம்பு.


வாலுவைத் தொடர்ந்து இது நம்ம ஆளு தொடர்ந்து முன்னாள் காதலிகளுடன் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகுது போல..English summary
Simbu - Nayanthara Starring Idhu Namma Aalu Audio Release Coming Soon.
Please Wait while comments are loading...