உங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு!

சென்னை: நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா உஷா ராஜேந்தர் ஊட்டி விடும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் சிம்பு.

ரசிகர்களுக்காக

ரசிகர்களுக்காக

யார் சொல்லியும் மாறாத சிம்பு தனது ரசிகர்களுக்காக திடீரென இப்படியொரு சேஞ்ச் ஓவர் செய்துள்ளார். தனது உடல் எடையை கூட கவனிக்காமல் இருந்து வந்த அவரை, எப்போதுமே கைவிடாமல் இருக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்த சிம்பு, டோட்டலாக மாறி தற்போது ஷூட்டிங்கில் செம பிசியாகி உள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக

குடும்பங்கள் கொண்டாடும் படமாக

இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஈஸ்வரன் படத்தை இறக்கி உள்ளார் நடிகர் சிம்பு. ஒரு மாதத்திற்கும் குறைவாக அதிவேகமாக நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் ஒரே ஷெட்யூலில் கலந்து கொண்டு நடித்து கலக்கிய சிம்புவின் ஈஸ்வரன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

அடுத்த மாதமே

அடுத்த மாதமே

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் சிம்புவின் மாநாடு திரைப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று அந்த படத்தின் கடைசி ஷெட்யூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்திலேயே மாநாடு படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து விடுமாம். வரும் சம்மருக்கு வலிமை, கோப்ரா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து தல

பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்து வரும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு ஊட்டிவிடும் உஷா

சிம்புவுக்கு ஊட்டிவிடும் உஷா

இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில், நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்த த்ரோபேக் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் உணவு ஊட்டி விடுகிறார். சிம்புவின் தங்கை மகன் சிம்புவிடத்தில் வாக்குவாதம் செய்வதாகவும் செம க்யூட்டாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

எங்கம்மா எனக்கு ஊட்டிவிடுறாங்க

சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகன் சிம்புவுடன் சமீபத்தில் வெளியே சுற்றும் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோவில், உங்களுக்கு ஏன் ஊட்டிவிடுறாங்க என சிறுவன் கேட்க, உங்க அம்மா உனக்கு ஊட்டிவிடுறாங்க, எங்கம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க என சிம்பு செல்லமாக பேசி மருமகனுடன் விவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார் பரிசு

சமீபத்தில் சிம்புவுக்கு அழகான பச்சை நிற மினி கூப்பர் கார் ஒன்றை அவரின் அம்மா உஷா ராஜேந்தர் பரிசாக அளித்தது இணையத்தில் பாராட்டுக்களை அள்ளியது. தற்போது சிம்புவுக்கு பாசமாக ஊட்டிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. என்றுமே அம்மாவின் பாசம் அளப்பறியது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X