திடீரென டி ராஜேந்தர் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு.. என்ன ஆச்சுன்னு நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவில் தீவிர சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
Recommended Video
அப்பாவின் சிகிச்சைக்காக முன்னதாக வெளிநாடு சென்ற நடிகர் சிம்பு அங்கே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு அதன் பின்னர் அப்பாவை வரவழைத்தார்.
இந்நிலையில், தற்போது அப்பா டி. ராஜேந்தர் உடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சிம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை
இயக்குநர், நடிகர், அரசியல் தலைவர் என பன்முகத் திறமை கொண்ட டி. ராஜேந்தருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அமெரிக்காவில் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் சமீபத்தில் வெளியானது.

சென்னைக்கு திரும்பிய சிம்பு
அம்மா உஷா, தம்பி குரளரசன் ஆகியோர் அப்பா டி ராஜேந்தருக்கு துணையாக அமெரிக்காவில் தற்போது உள்ள நிலையில், நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் புரமோஷனுக்காக சென்னைக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல, பத்து தல படத்தின் எஞ்சியிருக்கும் சூட்டிங்கிலும் அவர் பங்கேற்க போவதாகவும் கூறுகின்றனர்.

அப்பா போட்டோ
இந்நிலையில், தற்போது திடீரென நடிகர் சிம்பு தனது அப்பா டி. ராஜேந்தர் உடன் சிறுவயதில் இருக்கும் ஒரு க்யூட்டான புகைப்படத்தை ஷேர் செய்து ஒயிட் கலர் ஹார்ட்டினையும் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் அப்பா சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் அண்ணா எதற்கும் கவலைப்பட வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்னாச்சு
சில ரசிகர்கள் சிம்பு எந்தவொரு கேப்ஷனும் கொடுக்காமல் திடீரென டி. ராஜேந்தர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், அப்பாவின் உடல் நிலை எப்படி இருக்கு? அனைத்தும் நலம் தானே என்றும் நலம் விசாரித்து வருகின்றனர். அப்பாவை விட்டு பிரிந்து சென்னை திரும்பிய நிலையில் தான் நடிகர் சிம்பு அவரது நினைவால் இந்த புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களை விழாவில் கலந்து கொள்ள ஐசரி கணேஷ் ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பங்கேற்ற நிலையில், கமல் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











