பத்து தல படத்துக்காக வெயிட் போட்ட சிம்பு.. தாடி, தலைமுடின்னு ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே!

சென்னை: பத்து தல படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதாக சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்துள்ளார் நடிகர் சிம்பு.

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் சமீபத்தில் மஹா திரைப்படம் வெளியாகி இருந்தது.

விரைவில் வெந்து தணிந்தது காடு வெளியாக உள்ள நிலையில், பத்து தல சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

சரியான கம்பேக்

சரியான கம்பேக்

ரெட் கார்டு கொடுத்து நடிக்கவே கூடாது என ஒதுக்கி வைத்த நிலையில், மாநாடு படத்தின் மூலமாக சரியான கம்பேக் கொடுத்து அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகர் சிம்பு. குண்டான தோற்றத்தையும் அப்படியே டோட்டலாக வொர்க்கவுட் செய்து ஒல்லியாக மாறி மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.

ஹன்சிகாவுடன் மீண்டும்

ஹன்சிகாவுடன் மீண்டும்

நயன்தாரா உடன் பிரேக்கப் ஆன நிலையில், அடுத்ததாக வாலு படத்தில் ஜோடியாக நடித்த ஹன்சிகாவை காதலித்து வந்தார் நடிகர் சிம்பு. ஆனால், அந்த காதலும் பெரிதாக நீடிக்காமல் பிரேக்கப் ஆனது. அதன் பிறகு ஹன்சிகாவுடன் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், மஹா படத்தில் கேமியோவாக ஹன்சிகா நடிக்க அழைக்க பெரிய கேமியோ கதாபாத்திரத்திலேயே நடித்துக் கொடுத்து விட்டார் சிம்பு. சமீபத்தில், வெளியான அந்த படம் கலவையான விமர்சனங்களை அள்ளி உள்ளன.

வெந்து தணிந்தது காடு ரிலீஸ் எப்போ

வெந்து தணிந்தது காடு ரிலீஸ் எப்போ

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என கெளதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இரு முறை கூட்டணி அமைத்த நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் அதே கூட்டணியில் இணைந்து நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் வெளியாகிறது. சித்தி இத்னானி இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பத்து தல படப்பிடிப்பில்

பத்து தல படப்பிடிப்பில்

வெந்து தணிந்தது காடு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார். இந்த படத்திற்காக மீண்டும் சற்றே தனது உடல் எடையை அதிகரித்து இருக்கிறார் நடிகர் சிம்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தொட்டி ஜெயா படத்தில் பார்த்ததை போல கருப்பு சட்டை, தாடி என தெறி மாஸாக உள்ளார். கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஓய்வில் டி ராஜேந்தர்

ஓய்வில் டி ராஜேந்தர்

முன்னதாகவே பத்து தல படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், திடீரென டி ராஜேந்தரின் உடல் நலனில் குறைவு ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பிரத்யேக சிகிச்சையை அளித்து அவரை நலமுடன் பரிபூரண குணமாக்குவதற்காக சினிமாவை அப்படியே தள்ளி வைத்து விட்டு அப்பாவுக்காக சென்ற சிம்புவை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X