மாநாடு...அன்சீன் வீடியோக்களை வெளியிட்ட சிம்பு...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சென்னை : மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரில் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து பத்து தல படத்தின் வேலைகளை கவனிக்க உள்ளார் சிம்பு.

 மாநாடு டிக்கெட் புக்கிங்

மாநாடு டிக்கெட் புக்கிங்

இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சிம்பு படமான மாநாடு நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்திற்கான தியேட்டர் புக்கிங் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் படக்குழு சார்பில் ரிலீஸ் தேதி இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

சென்சார் போர்டு சான்று

சென்சார் போர்டு சான்று

இந்த வாரம் சென்சார் போர்டு குழுவினர் படத்தை பார்த்து சான்று வழங்க உள்ளனர். சென்சார் போர்டு சான்று கிடைத்த பிறகே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் மாநாடு ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட அன்சீன் ஃபோட்டோக்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்பு.

 வீடியோவை பகிர்ந்த சிம்பு

வீடியோவை பகிர்ந்த சிம்பு

சிம்புவிற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 4.8 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிம்புவின் ஒவ்வொரு போஸ்டையும் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் மாநாடு ஷுட்டிங் சமயத்தில், பறவைகளுக்கு உணவளித்தது, படக்குழுவினருடன் நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் ஆகியவற்றின் வீடியோக்களை சிம்பு பகிர்ந்துள்ளார்.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease
 வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

சிம்பு பகிர்ந்த இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீசை உறுதி செய்யச் சொல்லியும், படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய சொல்லியும் ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X