சிம்புவுக்கு இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணமா? உண்மை என்ன? சிம்பு தரப்பு கொடுத்த விளக்கம்!
சென்னை: நடிகர் சிம்புவுக்கும் இலங்கை தொழிலதிபர் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பான விளக்கத்தை சிம்பு தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சிம்பு தனது 40வது பிறந்தநாளை கடந்த பிப்ரவரி 3ம் தேதி கோலாகலமாக கொண்டாடினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது அது சற்றே தீவிரம் அடைந்துள்ளது.

நடிகர் சிம்பு
கைக்குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அப்பா டி. ராஜேந்தர் இயக்கி நடித்த பல படங்களில் நடித்து வளர்ந்த சிம்புவின் உடம்பு முழுக்கவே சினிமா ரத்தம் ஊறி இருக்கிறது. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக உருமாறிய சிம்பு மன்மதன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்தார். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளவர் சிம்பு.

நடிகைகளுடன் காதல்
40 வயதாகும் நடிகர் சிம்பு இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தாலும், காதல் லீலைகளை செய்யாமல் இல்லை. நடிகை நயன்தாரா உடன் வல்லவன் படத்தின் சமயத்தில் சிம்பு காதலில் விழுந்தார். இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. வாலு படத்தின் போது நடிகை ஹன்சிகாவுடன் சிம்பு காதல் கொண்டார். ஆனால், இதுவரை சிம்புவுக்கு காதல் செட்டாகி திருமணம் வரை செல்லவே இல்லை.

நிதி அகர்வாலுடன் கிசுகிசு
நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தில் இணைந்து நடித்த நிதி அகர்வாலை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நிதி அகர்வால் சிம்பு வீட்டிலேயே தங்கி உள்ளதாகவும் பரபரப்பான கிசுகிசுக்கள் எழுந்தன. உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படம் வெளியானதும் தான் அந்த கிசுகிசுக்கள் முடிவுக்கு வந்தன.

இலங்கை பெண்ணுடன் திருமணம்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சிம்பு இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரபரப்பான தகவல்கள் காட்டுத் தீ போல பரவின. சிம்புவுக்கும் இலங்கையை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், பத்திரிகைகளிலேயே அது செய்தியாக மாறியது.

சிம்பு தரப்பு விளக்கம்
இந்நிலையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுக்கும் திருமணம் என்கிற செய்தி
முற்றிலும் வதந்தி என்றும் அதனை யாரும் பரப்ப வேண்டாம் என நடிகர் சிம்பு தரப்பு தெரிவித்துள்ளது; மேலும், நடிகர் சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் மீடியாக்களுக்குத் தான் முதலில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











