Simbu: வேட்டை மன்னன் பராக் பராக்... மீண்டும் சிம்புவுடன் இணையும் நெல்சன்... விரைவில் சர்ப்ரைஸ்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கிய நெல்சன், கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார்.

 Simbu: Simbu and Nelson combo will be reunited after Vettai Mannan Film

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலருக்கு முன்னர், சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கி வந்தார் நெல்சன்.

இந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆன நிலையில், தற்போது மீண்டும் சிம்பு - நெல்சன் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் சிம்பு - நெல்சன் கூட்டணி
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த நெல்சன், சினிமாவிலும் இயக்குநராக அறிமுகமானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர், அவரது 4வது படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கி செம்ம மாஸ் காட்டியுள்ளார்.

அதன்படி, நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தலைவர் வைப், நெல்சனின் மேக்கிங் இரண்டும் சேர்ந்து ஜெயிலர் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியுள்ளது. இதனால், தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் நெல்சன். சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து அடுத்து எந்த ஹீரோவுடன் இணையப் போகிறார் என அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என இந்த மூன்று படங்களை விடவும் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்துள்ளது. கோலமாவு கோகிலா தான் நெல்சனின் முதல் படமாக ரிலீஸானாலும், அதற்கு முன்பே அவர் தொடங்கியது சிம்புவின் வேட்டை மன்னன் தான். நெல்சனுக்கு முதலில் இயக்குநர் சான்ஸ் கொடுத்த சிம்பு வேட்டை மன்னன் படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

சிம்புவுடன் ஹன்ஸிகா, ஜெய், சந்தானம் உள்ளிட்ட பலருடன் தொடங்கிய வேட்டை மன்னன், பாதியிலேயே ட்ராப் ஆனது. இதனால் தனது கேரியரே காலி என நினைத்துக்கொண்டிருந்த நெல்சனுக்கு கோலமாவு கோகிலா கை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் நெல்சனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அதன்பின்னர் தான் பீஸ்ட், ஜெயிலர் என விஜய், ரஜினியை இயக்கினார் நெல்சன்.

இந்நிலையில், ஜெயிலரை சூப்பர் ஹிட்டாக்கிய நெல்சன், மீண்டும் சன் பிக்சர்ஸ் பேனருக்கு தான் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே நெல்சன் - சிம்பு காம்போ மீண்டும் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் வெற்றியை பார்த்து நெல்சனிடம் பேசியுள்ளாராம் சிம்பு. அதனால், இக்கூட்டணியில் வேட்டை மன்னன் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் அது புதிய படமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X