Simbu: சிம்புவுக்கு அந்த ‘வாரிசு’ நடிகையுடன் திருமணமா.. அவங்களே என்ன சொல்லிருக்காங்கன்னு தெரியுமா?

சென்னை: சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். அதன்படி STR 48 என்ற டைட்டிலில் தொடங்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இந்நிலையில், சிம்புவுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் என செய்திகள் வெளியாகின. அதுகுறித்த உண்மையான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

சிம்புவுக்கு வாரிசு நடிகையுடன் திருமணம்..?
கோலிவுட்டின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான சிம்பு, விரைவில் STR 48 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் படப்பிடிப்பும் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Simbu: Simbu and Varalakshmi Sarathkumar is getting married are fake news

தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் STR 48, சிம்புவின் கேரியரில் மைல் ஸ்டோன் மூவியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

சமீபத்தில் தான் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு குழந்தை பிறந்தது. அதேபோல், சிம்புவின் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவரின் குழந்தைகளுக்கும் தாய் மாமா, பெரியப்பா என பதவி உயர்வு பெற்றுவிட்ட சிம்பு, அவர் மட்டும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.

இதனால் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், சிம்புவுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் திருமணம் என தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து போடா போடி படத்தில் நடித்துள்ளனர். மேலும் இருவரும் காதலித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், இருவருமே நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும், நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் சிம்பு, வரலட்சுமி ஆகியோரிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது. வரலட்சுமி சரத்குமார் விஷாலை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர்களின் காதலுக்கு சரத்குமார் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த ஜோடி பிரிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

அதேபோல் தான் சிம்புவும் வரலட்சுமியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதனை இருவருமே மறுத்துவிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இது பொய்யாக இருப்பினும் சிம்புவின் திருமணம் எப்போது என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X