Simbu: அந்த விஷயத்தில் சிம்புவை பார்த்து விஜய், அஜித்தே பொறாமை படுறாங்க... அவருதான் ஓபனிங் கிங்!
சென்னை: கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவான சிம்பு, மாநாடு படத்தின் மூலம் ஸ்மார்ட்டாக கம்பேக் கொடுத்தார்.
தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் நடித்த சிம்பு தற்போது, STR 48-ல் கமிட்டாகியுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் STR 48 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கில் சிம்புவுக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யூ குறித்து பிரபலம் ஒருவர் ஷாக்கிங் அப்டேட் கொடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி ஃபீல்ட்அவுட்டாகி வந்த சிம்பு, மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் வேற லெவலில் சம்பவம் செய்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் STR 48 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகும் STR 48ல், சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் கமல்ஹாசனும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். இதனிடையே இப்போதே STR 48 படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் தொடங்கிவிட்டதாம். சிம்புவுக்கு மிகப் பெரிய மார்க்கெட் வேல்யூ இருப்பதால், அவருடைய படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய், அஜித்தே பொறாமைப்படும் அளவிற்கு STR 48 படத்தின் ஓபனிங் இருக்கிறதாம்.
இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில், "இப்போதைய இளம் ஹீரோக்களில் சிம்புவுக்கு தான் அதிக ஓபனிங் இருக்கிறது. அஜித்துக்கு பிறகு என்பதை விட, விஜய், அஜித் இருவருமே பொறமைப்படும் அளவிற்கு சிம்புவிற்கு ஓபனிங் உள்ளதாகக் கூறியுள்ளார். சிம்புவின் படங்களுக்கு இருக்கும் ஓபனிங் கோலிவுட்டில் மற்ற நடிகர்களுக்கு இல்லையெனவும்" வலைப்பேச்சு அந்தணன் பேசியது வைரலாகி வருகிறது.
கமலின் விக்ரம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படங்களில் இசை வெளியீட்டு விழாவில், சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் என்ட்ரியான போது ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. அதேபோல், அவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களுக்கு முதல்நாளில் நல்ல ஓபனிங் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிம்பு எத்தனை முறை ஃபீல்ட் அவுட் ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











