Simbu: பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி... STR 49 கூட்டணியை உறுதி செய்த சிம்பு... இயக்குநர் அவரா?

சென்னை: சிம்புவின் STR 48 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், சிம்புவின் 49வது படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சிம்புவின் STR 49 படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

 Simbu: Simbu’s STR 49 Talks Going On With Big Director Producing By Ishari Ganesh

STR 49 கூட்டணியை உறுதி செய்த சிம்பு: சிம்பு தனது STR 48 படத்துக்காக லண்டன் சென்றுள்ளார். மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுப்பதற்காக லண்டன் சென்ற அவர், விரைவில் STR 48 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீஸான பத்து தல கமர்சியலாக ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து STR 48 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். STR 48ல் சிம்பு கமிட்டானதும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்பில் இருந்து பஞ்சாயத்து வந்தது.

அதாவது, வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த போதே, அதன் இரண்டாம் பாகம், கொரோனா குமார் ஆகிய படங்களை வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்து இருந்தாராம். ஆனால், கெளதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என தெரிகிறது. அதேபோல், கொரோனா குமார் படமும் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது.

இருந்தாலும் தனது வேல்ஸ் பிலிம்ஸ்க்கு சிம்பு ஒரு படம் பண்ணுவார் என ஐசரி கணேஷ் நம்பியிருந்தார். ஆனால், சிம்பு திடீரென ராஜ்கமல் பிலிம்ஸில் கமிட்டானதால், இந்த பஞ்சாயத்தை கமலிடமே கொண்டு சென்றுள்ளார் ஐசரி கணேஷ். அதன்பின்னரே மீண்டும் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க சிம்பு கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இது தான் சிம்புவின் 49வது படமாக உருவாகும் என சொல்லப்படுகிறது.

STR 48 ஷூட்டிங் தொடங்கும் போதே, STR 49 அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், STR 49 படத்தின் இயக்குநர் யார் என்பதை மட்டும் சீக்ரெட்டாக வைத்துள்ளார்களாம். போர் தொழில் படம் வெற்றிப் பெற்றதால் இயக்குநர் விக்னேஷ் ராஜாவை அழைத்துப் பாராட்டினார் சிம்பு. அதனால் அவர் தான் STR 49 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலிவுட்டின் முன்னணி இயக்குநருடன் தான் சிம்பு இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொருபக்கம் கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் சிம்பு. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், இதன் அபிஸியல் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே சிம்பு மீண்டும் கால்ஷீட் கொடுத்ததால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் மகிழ்ச்சியில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X