Simbu: Wow! வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் சிம்பு... ரசிகர்களுக்கு வைப் கொடுத்த அபிஸியல் அப்டேட்

சென்னை: சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இதனிடையே அமீர், வெற்றிமாறன் கூட்டணியில் சிம்பு இணைந்துள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் சிம்பு
கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்பு தற்போது அவரது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பீரியட் ஜானர் படமாக உருவாகிறது STR 48. இதற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டதோடு, தனது உடல் எடையையும் குறைத்துள்ளார்.

 Simbu: Simbu will release the first single from Ameers Maayavalai

இந்தப் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் சிம்பு இணைந்துள்ளதாக அபிஸியலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாகவே அமீரின் பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினையில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்துக்கும் சிக்கல் எழுந்தது.

அதாவது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். அவருடன் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனிடையே பருத்திவீரன் சர்ச்சையால் வாடிவாசல் படத்தில் அமீருடன் இணைந்து நடிக்க சூர்யா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வாடிவாசல் ட்ராப் ஆகுமா அல்லது வேறு ஹீரோவுடன் வெற்றிமாறன் இணைவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.

இதில், அஜித், தனுஷ் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் சிம்பு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வாடிவாசல் படத்தில் தான் சிம்பு கமிட்டாகிவிட்டாரோ என ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், இது வாடிவாசல் அப்டேட் இல்லை என்பதோடு, அமீர் நடித்துள்ள மாயவலை படம் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர் தற்போது ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள மாயவலை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர், யுவன் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன், அமீர் இணைந்து தயாரித்துள்ள மாயவலை படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'வாழ்க்கை ஒரு மாயவலை' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சிம்பு வெளியிடவுள்ளார். இதற்காக தான் வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் சிம்பு இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் சிம்பு தான் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் இறுதியாக சிம்பு ரோலில் தனுஷ் நடித்திருந்தார். அதேநேரம் விரைவில் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X