Simbu: STR 48-ல் சிம்புவின் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்ஷன்ஸ் தெறிக்கப் போகுது... ட்ரெண்டாகும் போஸ்டர்ஸ்!
சென்னை: சிம்புவின் STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் பீரியட் ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அடுத்த மாதம் சிம்புவின் பிறந்தநாளில் STR 48 டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்புவின் ஆக்ஷன் ட்ரீட் எப்படி இருக்கும் என சில போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிம்புவின் ஆக்ஷன் ட்ரீட் ரெடி
அடிக்கடி ஃபீல்ட் அவுட் ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை அப்படியே விடுவதாய் இல்லை. இதனால் மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார் சிம்பு. இதனையடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் கேங்ஸ்டராக கெத்து காட்டிய சிம்பு, இப்போது தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். STR 48 என்ற டைட்டிலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு, அதாவது சிம்பு பிறந்தநாளில் STR 48 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் சிம்பு ரசிகர்கள் இப்போதே அலப்பறையை கூட்டி வருகின்றனர். சிம்புவின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் டிபி ஆகியவற்றை கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியான சில போஸ்டர்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்டாக அமைந்துள்ளது. STR 48 படத்திற்காக தாய்லாந்து, லண்டன் சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டார் சிம்பு. STR 48 பீரியட் ஜானரில் உருவாகவிருப்பதால் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை சிம்பு நடித்திடாத தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக STR 48 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களிலும் சிம்புவே நடிப்பதால் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் என இரண்டு நாயகிகள் கமிட்டாகவுள்ளனர். இந்நிலையில், சிம்புவின் ஆக்ஷன் ட்ரீட் இப்படித்தான் இருக்கும் என சில போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பாக்ஸிங், கராத்தே என பங்கம் செய்து வருகிறார் சிம்பு. இது அனைத்துமே ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஃபேன்மேட் போஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டர்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகும் நிலையில், ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட்ஸ் பாஸ் செய்து வருகின்றனர். சிம்புவின் ஆக்ஷன் ட்ரீட் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. அதிலும் STR 48 பீரியட் ஜானர் ஆக்ஷன் மூவி என்பதால் நிச்சயம் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும் என கமெண்ட்ஸில் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











