Simbu: "சிலிர்க்க வைத்த சிம்பு... ப்பா வேற லெவல் கம்பேக்..” ட்ரெண்டாகும் தெறிமாஸ் வீடியோ!

சென்னை: சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

STR 48 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

STR 48 படத்திற்காக தாய்லாந்து, லண்டன் சென்ற சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுகொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் செம்ம மாஸ் வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

 Simbu: Simbus new Gym workout video is trending on Twitter

ட்ரெண்டாகும் சிம்புவின் 2.O வீடியோ: வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் நடித்திருந்தார். இதன்மூலம் மீண்டும் கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்த சிம்பு, அடுத்து தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். STR 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் திரும்பி பார்க்க வைத்த தேசிங்கு பெரியசாமி, STR 48 படத்தை இயக்கவுள்ளார். சிம்பு - தேசிங்கு பெரியசாமி - ராஜ்கமல் ஃபிலிம்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. முன்னதாக பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் தாய்லாந்து சென்ற சிம்பு, STR 48 படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுத்தார்.

அதன்பின்னர் லண்டன் சென்ற சிம்பு, அங்கும் STR 48 படத்திற்காக தனது லுக்கை மாற்றும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். பத்து தல படத்திற்காக நல்ல வெயிட் போட்டு கேங்ஸ்டர் லுக்கில் இருந்த சிம்பு, இப்போது மீண்டும் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்மார்ட்டாக திரும்பியுள்ளார். இதற்காக அவர் ஒர்க்அவுட் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த போதும் சிம்புவின் ஒர்க்அவுட் வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. அதேபோல் STR 48 படத்திற்காகவும் சிம்பு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிம்புவின் ஸ்டைலிஷான லுக்கும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. விதவிதமான காஸ்ட்யூமில் ரியலாக சம்பவம் செய்துள்ளார் சிம்பு.

இதனால் STR 48 படத்தில் சிம்புவின் கெட்டப் செம்மையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், STR 48 படத்தின் ஷூட்டிங் எப்போது எனவும், அதுபற்றிய அப்டேட்டுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவை பார்த்த ரசிகைகள், சிம்புவிற்கு எப்போது திருமணம் என கேட்டு அவருக்கு ப்ரபோஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X