பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்து.. லப்பர் பந்து ஹரிஷ் கல்யாணுக்காக.. சிம்பு செய்த சம்பவம்.. செம பாடல்!
சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம் டீசல். ஏற்கனவே படத்திற்கு முன்னர், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து படங்கள் செம ஹிட் அடித்தது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுத்தது. இதனால் டீசல் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே டீசல் படத்தின் பாடல் இணையத்தில் டிரெண்ட் ஆனது. இப்படியான நிலையில் இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் படங்களின் கதாநாயகனாக உருவெடுக்க வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு கவனமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு தரமான கதைகளை தேர்வு செய்வதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல், தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். இதனால் தொடர்ந்து மக்கள் மத்தியில் குட் மார்க்கில் உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டீசல். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம். ஹரீஷ் கல்யாண் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படமாக இந்தப் படம் உள்ளது.

சிம்பு - பாடல்: டீசல் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பீர் சாங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்தப் பாடல், பிடித்துப் போனது. குறிப்பாக இந்தப் பாடலில் இடம் பெற்ற, ஹம்மிங் இணையத்தில் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். இவருடன் பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். பாடலின் மெட்டு, குத்து பாடலைப் போல் உள்ளதாக, ரசிகர்கள் மத்தியில் பெரும், வரவேற்பை பெற்றுள்ளது.
கொண்டாட்டம்: பாடலை சிம்பு பாடி உள்ளதால், சிம்பு ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே சிம்பு பாடிய பாடல் ஒன்று அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள படமான, டிராகன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 21ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. டீசல் படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் தீவிரமான சிம்பு ரசிகர். அவருக்காகவே இந்தப் பாடலை பாட ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. டீசல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











