இர்பான் அகமத்திற்காக பாடிய அப்துல் காலிக்... எஃப்ஐஆர் படத்தின் வேற லெவல் அப்டேட்
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்ஐஆர்.
Recommended Video
இந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிகுந்த ஆர்வத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எஃப்ஐஆர் படம்
நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்ஐஆர். இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். வரும் 11ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

படத்தை தயாரித்த விஷ்ணு விஷால்
படம் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்துள்ளது.

சிறப்பான ட்ரெயிலர்
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு வஷால், ராட்சசன் படம் தனக்கு இந்திய அளவில் சிறப்பான மரியாதையை தந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து எஃப்ஐஆர் படத்தின் கதையை மனு கூறியபோது அது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார்.

பாராட்டிய தனுஷ்
படத்தில் இர்பான் அகமது என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை தனுஷ் உள்ளிட்டவர்கள் பார்த்து பாராட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரமோஷன் தீவிரம்
லாக் டவுன் அதிகமான நேரத்தை கொடுத்ததால் இந்தப் படத்தை மிகவும் அழகாக செய்ய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழ், தெலுங்கில் படத்தின் பிரமோஷன் பணிகளை அவர் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறார்.

பாடல் பாடிய சிம்பு
இந்நிலையில் படத்தின் தீம் பாடலை நடிகர் சிம்பு விஷ்ணு விஷாலுக்காக பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இர்பான் அகமதுவிற்காக அப்துல் காலிக் இந்த பாடலை பாடியுள்ளார். எப்ஐஆர் படத்தில் விஷ்ணுவின் கேரக்டர் பெயர் இர்பான் அகமது. அதேபோல மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் நாளைய தினம் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











