விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. வெளியானது சிம்பு பாடிய பாடல்

சென்னை: விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.

இந்த படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ளார், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலாக படக்குழு "முருகா" எனும் பாடலை நேற்று மாலை வெளியிட்டுள்ளது.

மே 13 வெளியீடு

மே 13 வெளியீடு

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர், உப்பெனா நல்ல வரவேற்பை பெற சம்மரில் கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளார். துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன் சம்மர் ரிலீசுக்கு தயாராக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் மே13ம் தேதி வெளியாகவுள்ளது.

2 மில்லியன் வியூவ்ஸ்

2 மில்லியன் வியூவ்ஸ்

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடித்துள்ளார். விஜய் சேதுபதி இலங்கை தமிழனாக நடித்துள்ளார். படத்தின் டீசர் 2மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முதல் முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள மகிழ் திருமேனியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மகிழ் திருமேனி முன்னதாக டெடி படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் வெளியிட்டார்

அனிருத் வெளியிட்டார்


படத்தின் முதல் பாடலான "முருகா" பாடலை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், மோகன் ராஜன் வரிகளில், சிம்புவின் குரலில் தயாராகியுள்ள இந்த பாடலை அனிருத் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay sethupathi simbu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X