»   »  தேசி தேசி தேசி கேர்ள்... பிரசாந்த்தின் சாஹசம் படத்தில் சிம்பு பாடிய பாடல்!

தேசி தேசி தேசி கேர்ள்... பிரசாந்த்தின் சாஹசம் படத்தில் சிம்பு பாடிய பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வரும் சாஹசம் படத்தில் நடிகர் சிம்புவும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிப்பில் அருண் ராஜ் வர்மா இயக்கி வரும் படம் சாஹசம். இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

தமன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்படப் பாடல்களை நடிகை லட்சுமிமேனன், அனிருத், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங், ஆண்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

சிம்பு வருகை...

சிம்பு வருகை...

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக லண்டனின் இருந்த சிம்பு சென்னை திரும்பியதும், விமான நிலையத்தில் இருந்து நேராக தம்ன ஸ்டுடியோவுக்கு சென்று பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

தேசி கேர்ள்...

தேசி கேர்ள்...

இப்பாடல் ‘தேசி தேசி தேசி கேர்ள்...' எனத் தொடங்குகிறது. இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்கள் பாடியுள்ள சாஹசம் படத்தில் சிம்புவும் இணைந்திருக்கிறார்.

விரைவில் இசைவெளியீடு...

விரைவில் இசைவெளியீடு...

சிம்புவின் பாடலோடி சாஹசம் படத்தின் அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டு விட்டன. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நேரிலும்...

நேரிலும்...

அந்த விழா மேடையில் சாஹசம் படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் நேரில் நேரில் பாடவுள்ளார்கள்.

அமுத கானங்கள்...

அமுத கானங்கள்...

இசை பிரியர்களுக்கு அமுதமாய் அமையவுள்ள சாஹசம் படத்தின் பாடல்கள் வெகு விரைவில் வெளிவந்து எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யும் என தியாகராஜன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

மம்பட்டியான்...

மம்பட்டியான்...

ஏற்கனவே சிம்பு, பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Popular Tamil film actor Simbu alias Silambarasan has sung a song 'Desi Desi Girl' in the upcoming action-comedy flick 'Saahasam', a remake of Telugu hit 'Julayi'. Actor Prashanth is playing the lead role in the movie, produced by his father actor-director Thiagarajan. The movie is directed by debutante Arun Raj Varma.
Please Wait while comments are loading...