Vijayakanth death: விஜயகாந்த் மறைவு.. சிம்பு உருக்கம்.. எஸ்ஜே சூர்யா வருத்தம்.. சிம்ரன் இரங்கல்!

சென்னை: நடிகர் விஜயகாந்தின் மறைவு அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் அதிகமாக கலங்கடித்துள்ளது. விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடியும் விஜயகாந்தின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், சிம்பு, எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகராக மட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவராகவும், தேமுதிக தலைவராகவும் பல்வேறு விதங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராக ஏராளமான நல்ல விஷயங்களை செய்துள்ளார். சினிமா பிரபலங்களை திரட்டி பல கலைநிகழ்ச்சிகளை நடத்திய விஜயகாந்த், அதன்மூலம் கிடைத்த பணத்தை கொண்டு நடிகர் சங்க கடனை அடைத்தவர். எம்ஜிஆரை போலவே பலருக்கும் வயிராற சோறு போட்டவர் என்பதால் கருப்பு எம்ஜிஆர் என்று புகழப்பட்டவர் விஜயகாந்த்.

Simbu, SJ Surya & Simram condolence about Vijayakanth death

நடிகர் விஜயகாந்த்: கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு, தைராய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், நடிப்பு, அரசியல் என எதிலும் செயல்படாமல் வீட்டிலேயே முடங்கினார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவருக்கு கால் விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தைராய்டு காரணமாக பேச்சு பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுநீரக பிரச்சினை, முதுகு தண்டுவட பிரச்சினை போன்றவற்றாலும் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு ஞாபக மறதியும் இருந்தது. இதனிடையே கடந்த 18ம் தேதி சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று: இதையடுத்து வீடு திரும்பிய விஜயகாந்திற்கு சில தினங்களிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தனது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்துள்ளார். அவரது மறைவிற்கு ஏராளமான ரசிகர்கள், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தங்களது அஞ்சலியை பிரபலங்களும் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு இரங்கல்: நடிகர் சிம்புவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். விஜயகாந்த் மறைவு இதயத்தை நொருக்கிவிட்டதாக அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ரீலிலும் ரியலிலும் ஹீரோவாக இருந்தவர் என்றும் விஜயகாந்த் குறித்து சிம்பு தெரிவித்துள்ளார். எப்போதும் தான் விஜயகாந்தை சகோதரராகவே பார்த்ததாகவும் தெரிவித்துள்ள சிம்பு, அவர் மறைந்தாலும் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் வாழும் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்துடன் தான் இருக்கும்படியாக புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Simbu, SJ Surya & Simram condolence about Vijayakanth death

எஸ்ஜே சூர்யா -சிம்ரன் வருத்தம்: இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்தின் மறைவிற்கு நடிகர் எஸ்ஜே சூர்யாவும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மனிதனாக, நடிகராக, அரசியல் கட்சி தலைவராக விஜயகாந்தின் சேவை என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி ஐதராபாத்தில் சூட்டிங்கில் சிக்கிக் கொண்டதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே விஜயகாந்துடன் கண்ணுபடப் போகுதய்யா, ரமணா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகை சிம்ரனும் தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X