படையப்பாவாக மாறிய சிம்பு.. ஒத்த கையில் பாம்பை பிடித்த வைரல் வீடியோ!
சென்னை : கோலிவுட்டில் இப்பொழுது மட்டுமல்லாமல் எப்பொழுதும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் ஒருவர் நடிகர் சிம்பு.
Recommended Video
சர்ச்சைகளானாலும் சரி, ட்ரெண்டிங் என்றாலும் சரி என்றைக்குமே இவ தான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறார்.
இயக்குனர் சுசீந்திரன் உடன் இவர் இணையும் ஈஸ்வரன் திரைப்படத்தின் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையதளத்தை கதறவிட்ட நிலையில் இப்பொழுது, அந்த சூட்டிங் ஸ்பாட்டில் பாம்பை அசால்ட்டாக ஒத்த கையில் பிடிச்ச சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அடுக்கும் குற்றச்சாட்டுகள்
தமிழ் திரையுலகில் எப்பொழுதும் பேசுபொருளாக இருந்து வரும் மிக முக்கியமானவர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. திறமையான நடிகராக இருப்பினும் இவர் மீது பலர் அடுக்கும் குற்றச்சாட்டுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பாசம் மாறாமல்
படப்பிடிப்புக்கு வருவதில்லை அல்லது தாமதமாக வருவது, படத்தின் கதையில் தலையிடுவது என இவர் மீது ஒரு சிலர் குற்றச் சாட்டுகள் வைத்தாலும் ரசிகர்கள் இவரை இன்று வரை துளிகூட பாசம் மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.

தொடர் பிரச்சனைகளுக்கு
படம் வெற்றியோ தோல்வியோ நீங்கள் நடித்தால் மட்டும் போதும் என சிம்புவின் ரசிகர்கள் இன்று வரை சிம்புவை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநாடு, மஃப்டி என தொடர் பிரச்சனைகளுக்கு பிறகு இப்போது சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

சில புகைப்படங்கள்
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் இருந்த சிம்புவிற்கு அப்படியே ஆப்போசிட்டாக உடல் எடையை முற்றிலும் குறைத்து ஸ்லிம்மான சிம்புவாக மாறி அதிர வைத்திருக்கும் சிம்புவின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபகாலமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

மாஸான ஃபர்ஸ்ட் லுக்
இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சிம்பு முதல் முறையாக இணையும் திரைப்படத்திற்கு ஈஸ்வரன் என்ன பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சக்கைபோடு போட்டு இணையதளத்தை பந்தாடியது.

கையில் பாம்புடனும்
சிம்பு இதுவரை நடித்திராத வித்தியாசமான வில்லேஜ் கதாபாத்திரத்தில் ஒரு போஸ்டரில் கையில் பாம்புடனும் மற்றொரு போஸ்டரில் தலைப்பாகையுடன் கிரிக்கெட் பேட் என வித்தியாசமாக போஸ் கொடுத்திருந்த சிம்புவின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது மீண்டும் சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

படையப்பா ரஜினிகாந்த்
படையப்பா படத்தில் ரஜினிகாந்த் புற்றிலிருந்து பாம்பை அசால்டாக எடுப்பதுபோல, சிம்புவும் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பாம்பை அசால்ட்டாக கையில் பிடிச்சு பையில் போட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வா தலைவா வா தலைவா!


Click it and Unblock the Notifications











