தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பலாமா... வேற லெவல் ஆட்டத்துக்கு உத்தரவாதம் தரும் சிம்பு!

சென்னை : டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகிய நிலையில் தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

விஜய் டிவியின் சிறப்பான மற்றும் முதல் நிகழ்ச்சியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட்டாக நடைபெற்று வருகிறது.

40 நாட்களை கடந்த நிகழ்ச்சி

40 நாட்களை கடந்த நிகழ்ச்சி

24 மணிநேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்த நிலையில் தன்னால் நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று அவர் விலகினார். தொடர்ந்து தற்போது நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

வைல்ட் கார்டில் நுழைந்த சுரேஷ்

வைல்ட் கார்டில் நுழைந்த சுரேஷ்

இந்த நிகழ்ச்சியில் சினேகன்,சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன்களில் இருந்து பங்கேற்றுள்ளனர். முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதேபோல வைல்ட் கார்ட் மூலம் சதீஷ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

சினேகன் வெளியேற்றம்?

சினேகன் வெளியேற்றம்?

இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து பிரபல பாடகரும் நடிகருமான சினேகன் வெளியேறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் அவர் வெளியேறுவதும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

புதிய ப்ரோமோ வெளியீடு

புதிய ப்ரோமோ வெளியீடு

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்த புதிய ப்ரோமோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு பேசுவதாக அமைந்துள்ளது. கான்ட்ராஸ்டான இரண்டு விஷயங்கள் சேரும்போது நிகழ்ச்சிக்கு புதிய ப்ளேவர் சேருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தூங்குவது போல நடிப்பவர்கள்

தூங்குவது போல நடிப்பவர்கள்

மேலும் இந்த விஷயம் நிகழ்ச்சிக்கு மேலும் சுவையை கூட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியில் தூங்கியவர்களை எழுப்பிவிட்டதாகவும் ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பலாமா என்றும் அவர் ட்விஸ்ட் வைத்துள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X