உடல்தான் சொத்து.. உண்மையை பேசுறவனுக்குத்தான் கஷ்டம்.. இந்தியன் 2 விழாவில் சிம்பு அசத்தல் பேச்சு
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் கமல் ஹாசன், ஷங்கர், அனிருத், அதிதி ஷங்கர், நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கு சிம்பு தாமதமாக வந்தார். இருந்தாலும் அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறது. முக்கியமாக அவரது பேச்சை பார்த்த ரசிகர்கள் சிம்பு பயங்கரமாக பேசியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வரிசையாக ஹி படங்களை கொடுத்தவர். அந்தவகையில் அவர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது.

ரஜினிக்கு சென்ற கதை: முதலில் இந்தியன் திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த்திடம்தான் சொன்னார் ஷங்கர். ரஜினியை மனதில் வைத்துதான் இந்தியன் படத்தின் ஹீரோ தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கும் மேனரிசத்தை யோசித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு கமல் ஹாசன் உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்தாலும் ரஜினிக்காக யோசித்து வைத்திருந்த அந்த முடி ஒதுக்கும் மேனரிசத்தை கமல் ஹாசனை வைத்து செய்ய வைத்தார். அதுவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
பக்கா ஆல்பம்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.
இந்தியன் 2: இந்தியன் படத்தின் க்ளைமேக்ஸில் அதற்கான இரண்டாம் பாக லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாகவே ஆரம்பிக்கப்படவில்லை. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வேலைகள் ஆரம்பித்தபோது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இசை வெளியீட்டு விழா: படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கும் சூழலில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவுக்கு சிம்பு தாமதமாக வந்தாலும் அருமையாக பேசியிருந்தார். விழாவில் பேசிய சிம்பு, "விழாவுக்கு தாமதமாக வந்தேன் என்று நினைக்காதீர்கள். இருந்தாலும் நான் லேட்டாக வந்தேன் என்றுதான் சொல்வார்கள். கமல் சாரின் தக் லைஃப் படத்தின் ஷூட்டிலிருந்துதான் வருகிறேன். இந்தியன் எனக்கு நெருக்கமான படம்.
வடிவத்தை செட் பண்ணியது: கமர்ஷியல் படங்களுக்கு என்று ஒரு வடிவத்தை செட் பண்ணியதே இந்தியன் படம்தான். கமல் ஹாசன் எனக்கு ஆன் ஸ்க்ரீன் குரு. கமலுடன் நடித்த அனுபவத்தை தக் லைஃப் மேடையில் பேசுவேன். அவருடன் நடிக்கும்போது மட்டும் எனக்குள் ஒன்றுமே தோன்றவில்லை. அவரை பார்த்துக்கொண்டிருக்க மட்டும்தான் தோன்றும். கமல் ஹாசன் உண்மையான பான் இந்தியா ஸ்டார். ஒரே நேரத்தில் இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர் என மூன்று படங்களை எடுக்க ஷங்கரால்தான் முடியும். அது சாதாரண விஷயம் இல்லை. அவர் நிஜமாகவே கிரேட்.
உண்மையை பேசினால் வம்பு: இந்தப் படத்தில் அனிருத் நன்றாக இசையமைத்திருப்பார் என்று நம்புகிறேன். நான் ஏதோ ட்ராஸ்பார்ம் ஆனேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அது ஒரு ஸ்பிரிச்சுவல் விஷயம். நம்முடன் இருக்கும் எல்லோரும் நம்மை விட்டுவிட்டு போய்விடுவார்கள். நமது உடல் மட்டும்தான் நம்முடன் இருக்கும். அதனால் நாம் அதனை ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்திலேயெ உண்மையை பேசுறவனுக்குத்தான் கஷ்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications