ப்ரோமோஷனுக்கு ரெடியான பத்து தல டீம்... டீசருடன் வேட்டையைத் தொடங்கும் சிம்பு... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: சிம்புவின் நடிப்பில் அடுத்து பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிம்புவின் பிறந்தநாளில் பத்து தல படத்தின் முதல் பாடல் 'நம்ம சத்தம்' வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விரைவில் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்க சிம்பு ரெடியாகிவிட்டாராம்.

அதேபோல், பத்து தல படத்தின் டீசர் ரிலீஸ் பற்றியும் தகவல்கள் வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

பத்து தல அவதாரம் எடுக்கும் சிம்பு

பத்து தல அவதாரம் எடுக்கும் சிம்பு

கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவின் கேரியர் டாப்பில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு, கெளதம் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக உருவான வெந்து தணிந்தது காடு படங்கள் சிம்புவுக்கு தரமான கம்பேக் கொடுத்தன. இதன் தொடர்ச்சியாக சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பத்து தல டீசர்

விரைவில் பத்து தல டீசர்

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் கேங்ஸ்டராக நடித்திருந்த கேரக்டரில் தான் தமிழில் சிம்புவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது எதிர்பார்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அதனைத் தொடர்ந்து விரைவில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

டீசரை தொடர்ந்து ப்ரோமோஷன்

டீசரை தொடர்ந்து ப்ரோமோஷன்

'நம்ம சத்தம்' எனத் தொடங்கும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை ஏஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ளார். மேலும், அவருடன் யோகி சேகரும் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் சிம்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக பத்து தல டீசர் அடுத்த வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பத்து தல படத்தின் ப்ரோமோஷன் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

பத்து தல ப்ரோமோஷனுக்காக சிம்பு ரெடியாகி வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 2021ல் மாநாடு, 2022ம் ஆண்டு வெந்து தணிந்தது காடு என ஹிட் கொடுத்த சிம்பு, 2023ல் பத்து தல படத்தை ப்ளாக் பஸ்டராக கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேபோல் விரைவில் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X