மாநாடு.. சண்டைக்கான வேலைகளை ஆரம்பித்த சிம்பு.. புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு படத்திற்காக சிம்பு தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: மாநாடு படத்திற்காக தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிம்பு.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க முதலில் ஒப்பந்தமானது. ஆனால் அவர் கால்ஷீட் கொடுக்காமல் தாமதப்படுத்தியதால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இதனால் விரக்தியடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை படத்தில் இருந்து நீக்கினார். பின்னர் இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. அங்கு நடந்த பஞ்சாயத்துகளுக்கு பிறகு, மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டு, நிபந்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து மாநாடு படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்காக சிம்பு குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். அந்த வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே சபரிமலை அய்யப்பனுக்கு விரதம் இருந்து, இருமுடி சுமந்து சாமிதரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார் சிம்பு. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











