»   »  "நயன் என்ன நினைப்பாரோ என பயந்தேன்.." - மனம் திறந்த சிம்பு!

"நயன் என்ன நினைப்பாரோ என பயந்தேன்.." - மனம் திறந்த சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவின் நயனும் த்ரிஷாவும்- வீடியோ

சென்னை : நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. பின்னர், இருவரும் சில பிரச்னைகளால் பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு பிரபு தேவாவுடன் நெருக்கமாக இருந்துவந்த நயன்தாரா தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் டி.வி நிகழ்ச்சியில் நயன்தாராவைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் சிம்பு.

காதல்

காதல்

நயன்தாராவும், சிம்புவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தனர். பின்னர், இருவரும் சில பிரச்னைகளால் பிரிந்து விட்டனர். பிறகு பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்துவந்த நயன் தற்போது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார்.

சிம்பு

சிம்பு

சிம்புவுடனான நயன் தாராவின் காதல் முறிந்தபிறகு இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுவதைத் தவிர்த்து வந்தனர். இதற்கிடையே 'இது நம்ம ஆளு' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா பற்றி சிம்பு

நயன்தாரா பற்றி சிம்பு

இந்நிலையில், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாரா பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

சிம்புவிடம், நயன்தாரா குறித்து கேட்கப்பட்டது. "நான் வல்லவன் படம் எடுத்த சமயம். நயன் உதட்டை நான் கடித்து இழுப்பது போல போட்டோஷூட் நடத்தி, போஸ்டராகவும் வெளியிட்டோம். அது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

நீங்கள் சொல்வதை செய்வேன்

நீங்கள் சொல்வதை செய்வேன்

இதுபற்றி நயன் என்ன நினைப்பாரோ என்று நினைத்து கவலையாக இருந்தது. ஆனால், 'இது எனக்குத் தொழில். நீங்கள் இயக்குநர். நீங்கள் சொல்வதை நான் செய்வேன்' என்று கூறி அதன்பிறகு அந்தக் காட்சியிலும் நடித்துக் கொடுத்தார் அவர்.

பெரிய ஸ்டார்

பெரிய ஸ்டார்

இன்றைக்கு இவ்வளவு பெரிய ஸ்டாராக நயன்தாரா இருக்கிறார் என்றால், அதுதான் காரணம்" என்று கூறியுள்ளார் சிம்பு. சிம்பு மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், சமீபகாலமாக புதிய மனிதராகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

English summary
Nayanthara and Simbu love each other for a while. Later, both were separated by some problems. In this situation, Simbu has spoken openly after a long time about Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil