Don't Miss!
- Technology
"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Sports
தொடக்க வீரராக யாருக்கு இடம்.. கேஎல் ராகுல், சுப்மன் கில் இடையே கடும் போட்டி.. குழப்பத்தில் ரோகித்
- Finance
அதானி, அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை..!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிம்புவுடன் இணையும் சுதா கொங்கரா?: KGF தயாரிப்பு நிறுவனத்தின் மெகா பட்ஜெட்டில் தரமான சம்பவம்!
சென்னை: முன்னணி இயக்குநராக வலம்வரும் சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் பிஸியாக உள்ளார்.
தமிழில் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த 'சூரரைப் போற்று' படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியது.
சூரரைப் போற்றுக்கு பின்னர் சுதா கொங்கரா இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
National
Awards
2022:
சுதா
கொங்கராவுக்கு
திடீரென
2
விருது…
இது
என்ன
புது
கணக்கு?

தேசிய விருது வென்ற சூரரைப் போற்று
மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான 'இறுதிச் சுற்று' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சுதா கொங்காரா. ஸ்போர்ஸ் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் கூட்டணி வைத்தார் சுதா கொங்காரா. டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனர் கோபிநாத்தின் பயோபிக்காக உருவான இந்தப் படம், நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இமாலய வெற்றியடைந்த 'சூரரைப் போற்று', 5 தேசிய விருதுகளையும் வென்று பிரமிக்க வைத்தது.

மெஹா கூட்டணியில் சுதா கொங்கரா
சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பால் தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது. அக்சய் குமார் நடிப்பில் இந்தியிலும் சுதா இயக்கும் 'சூரரைப் போற்று', விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்துடன் இணைகிறார் சுதா கொங்கரா. இந்தப் படம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. மேலும் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

ஹீரோவாகும் சிலம்பரசன்
இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இந்தப் படம் இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இல்லையென்றும், இதில் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சிம்புவுக்கு ஜோடியாக வேண்டுமானால் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில்
சிம்புவின் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளதால், சுதா கொங்கரா இயக்கும் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க ஹோம்பலே ஃபிலிம்ஸ் முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே கேஜிஎஃப் படம் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஹோம்பலே ஃபிலிம்ஸ், இப்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ள 'கந்தாரா' படத்தையும் தயாரித்துள்ளது. முன்னதாக கந்தாரா படத்தின் வெற்றியை பாராட்டி, நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு கேக் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.