பாசிட்டிவ் ஸ்டோரி.. ரசிகருக்கு தைரியம் கொடுத்த சிம்பு.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. எழுந்து வருவ!
சென்னை: நோய் தொற்று காரணமாக அவதிப்பட்டு வரும் ரசிகர் ஒருவருக்கு நடிகர் சிம்பு பாசிட்டிவ் ஸ்டோரி சொல்லி தைரியம் அளித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு காய்கறி சந்தை மாறிவிட்டது.
ஒரு வார காலமாக கோயம்பேடு சந்தையால் தமிழகத்தில் அந்த நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

சிம்பு ரசிகர்
கோயம்பேடு மார்க்கெட்டில் கடை ஒன்றை நடத்தி வந்த நடிகர் சிம்புவின் ரசிகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால், மனமுடைந்து போய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அந்த ரசிகர். ரசிகருக்கு நோய்த் தொற்று பரவிய தகவல் நடிகர் சிம்புவின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

போன் கால்
இதுகுறித்த தகவலை அறிந்த அடுத்த நொடி, நடிகர் சிலம்பரசன், உடனடியாக தனது ரசிகருக்கு போன் போட்டு பேசியுள்ளார். என்ன ஆச்சு? எப்படி நடந்தது? குடும்ப உறுப்பினர்கள் நலமா? என்பதை எல்லாம் போனில் கேட்டு தெரிந்துக் கொண்டு நலம் விசாரித்துள்ளார். நடிகர் சிம்புவின் போன் காலை எதிர்பாராத அந்த ரசிகர் திக்குமுக்காடி போயுள்ளார்.

பாசிட்டிவ் ஸ்டோரி
ரசிகரை தைரியப்படுத்த நினைத்த நடிகர் சிம்பு, தனது பள்ளிப்பருவ நாட்களில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் என் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன். மற்ற மாணவர்கள் ஒவ்வொரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வந்திருந்தார்.

குழந்தைக்காக
ஜேவலின் த்ரோ பயிற்சி செய்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி அப்போது அவர் மார்பில் பாய்ந்தது. பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் அடித்துப் பிடித்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தோம். தனது குழந்தைக்காக தான் குணமாகி வருவேன் என நம்பிக்கையுடன் அவர் கூறினார். அந்த நம்பிக்கை அவரை சீக்கிரமே உயிர் பிழைக்க வைத்தது.

உன்னால் முடியும்
அதே போல நீயும் இந்த கொரோனாவை எதிர்த்து போராடுவாய், நிச்சயம் உனது குடும்பத்துக்காக நோயில் இருந்து பூரணமாக குணமாகி வருவாய் என நடிகர் சிம்பு பேசிய போன்கால் குறித்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் புல்லரிக்க செய்துள்ளது. சமூக வலைதளத்தில் இதனை வைரலாக்கியும் வருகின்றனர்.

மாநாடு
சுந்தர் சி இயக்கத்தில் உருவான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு மற்றும் மஹா படத்திற்காக அவரது ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் பின்னணியில் தொடங்கப்பட்ட அந்த படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











