Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மல்லிப்பூ பாடலை வச்சி சம்பவம் செய்யும் ரசிகர்கள்… திடீர்னு வீடியோ ரிலீஸ் பண்ண சிம்பு!
சென்னை: சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக சிறப்பான சம்பவம் செய்துள்ளது.
கடந்த 15ம் தேதி வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.
வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

சிம்புவை கொண்டாடிய ரசிகர்கள்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களில் மாஸ் காட்டிய சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் காம்போ, மூன்றாவதாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்தனர். 'நதிகளில் நீராடும் சூரியன்' என்ற டைட்டிலில் தொடங்கிய சிம்புவின் படம், பின்னர் 'வெந்து தணிந்தது காடு' என கேங்ஸ்டர் ஜானருக்கு மாறியது. எப்போதும் போல மாஸாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, சிம்பு வேறலெவலில் வெரைட்டியாக பெர்பாமன்ஸ் செய்து கெத்து காட்டினார்.

ரசிகர்களை மயக்கிய மல்லிப்பூ சாங்
சிம்புவின் கேரியரில் வெந்து தணிந்தது காடு சிறப்பான திரைப்படம் என ரசிகர்கள் கொண்டாடினர். முத்து வீரனாக அவரது பக்குவமான நடிப்பும் மேனரிசமும் நன்றாக ஒர்க்அவுட் ஆனது. அதனால், கண்டிப்பாக இந்தப் படத்தின் 2ம் பாகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் செம்ம ஹிட் அடித்தது. குறிப்பாக ஏஆர் ரஹ்மான் இசையில் மதுஸ்ரீ குரலில் வெளியான 'மல்லிப்பூ' பாடல் தாறுமாறாக ஹிட்டானது.

வச்சி செய்யும் சிம்பு ரசிகர்கள்
ஏஆர் ரஹ்மானின் வேறலெவல் இசையில் உருவாகியிருந்த இந்தப் பாடலை தாமரை எழுதியிருந்தார். மல்லிப்பூ பாடல் வெளியானது முதல் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சிங்கிள் ஷாட்டில் உருவான இந்தப் பாடலில் முழு வீடியோவும் வெளியாகி இன்னும் ட்ரெண்டானது. மல்லிப்பூ பாடலில் சிம்புவின் க்யூட்டான டான்ஸையும் ரசிகர்கள் ரொம்பவே கொண்டாடினர். வெள்ளந்தியான சிம்புவின் டான்ஸ் அவரது ரசிகர்களையும் கடந்து பலரையும் ஈர்த்தது.

நன்றி சொன்ன சிம்பு
மல்லிப்பூ பாடலை தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்த ரசிகர்கள், அந்தப் பாடலுக்கு ரீல்ஸிலும் செம்ம ஆட்டம் போட்டு வைரலாக்கினர். இந்நிலையில், மல்லிப்பூ பாடல் ரீல்ஸில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரீ-கிரியேட் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு ட்வீட் செய்துள்ளார். முன்னதாக மல்லிப்பூ பாடல் குறித்து பேசியிருந்த சிம்பு, இந்தப் பாடலை முதன்முறையாக கேட்டபோதே இது ஹிட்டடிக்கும் என தெரியும். ஏஆர் ரஹ்மான் சாரின் சூப்பரான கம்போசிங் எனவும் பாராட்டியிருந்தது குறீப்பிடத்தக்கது.