Simbu: STR 48 படத்துக்கு செக் வைத்த கொரோனா குமார்... இது என்ன சிம்புவுக்கு வந்த புது பஞ்சாயத்து?

சென்னை: சிம்புவின் STR 48 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், STR 48 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே பழைய பஞ்சாயத்து ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளதாம்.

அதனால், சிம்புவின் STR 48 ஷூட்டிங் திட்டமிட்டபடி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 Simbu: There was a problem with Simbu due to Corona Kumar producer Ishari Ganesh

சிம்புவை தேடிவந்த பஞ்சாயத்து:மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறார். வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால், அவரது மார்க்கெட் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் பத்து தல படம் வெளியான நிலையில், அடுத்து STR 48ல் கமிட்டாகியுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே STR 48 படத்திற்காக தாய்லாந்து சென்றிருந்த சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து தற்போது STR 48 படத்திற்காக லண்டனுக்கும் சென்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் வலம் வந்த சிம்புவின் புதிய லுக் செம்ம ட்ரெண்டானது. இதனால் விரைவில் STR 48 ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரித்தார்.

வெந்து தணிந்தது காடு வெளியாகும் முன்பே ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஓக்கே கூறியிருந்தாராம் சிம்பு. அதில் ஒன்று கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் என சொல்லப்பட்டது. இன்னொரு படமான கொரோனா குமார்-ஐ கோகுல் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், திடீரென இந்த இரண்டு படங்களுமே ட்ராப் ஆகும் சூழல் ஏற்பட்டது.

 Simbu: There was a problem with Simbu due to Corona Kumar producer Ishari Ganesh

சிம்பு - கெளதம் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் வெந்து தணிந்தது காடு 2 கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்குப் பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால் தான் சிம்புவும் ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு கால்ஷீட் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது சிம்பு தனது பேனரில் மீண்டும் நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் வலியுறுத்தி வருகிறாராம்.

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை பாராட்டி சிம்புவுக்கு பல லட்சம் மதிப்புடைய கார் பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் ஐசரி கணேஷ். அப்படிப்பட்டவருக்கு விபூதி அடித்தால் சிம்புவை அவர் சும்மா விடுவாரா என்ன.? வெந்து தணிந்தது காடு 2 அல்லது கொரோனா குமார் இந்த இரண்டு படங்களில் எதாவது ஒன்றில் சிம்பு நடித்துக்கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

இதனால் விரைவில் இந்த பஞ்சாயத்துக்கு கமல்ஹாசன் தலைமையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னரே சிம்புவின் STR 48 ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிம்பு - ஐசரி கணேஷ் பஞ்சாயத்து கமல் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X