பயத்த பார்த்து நான் ஏன் பயப்படணும்.. பயத்துக்கே பயத்தைக் காட்டிய சிம்பு.. த்ரோபேக் பேட்டி!

சென்னை: நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சதிரமாக இருந்து நடித்து வருகின்றார். நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராக, இயக்குநராக, பாடலாசிரியராக, பாடகராக தனக்குத் தெரிந்த அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டி வருகின்றார். சிம்புவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம், அவர் படத்தில் நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் என்றைக்கும் இருந்து வந்து கொண்டே உள்ளது.

சிம்பு கடைசியாக நடித்து வெளியான படம், பத்து தல. இந்தப் படத்திற்குப் பின்னர் இவர் நடிப்பில் இன்னும் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இந்த ஆண்டு இவரது நடிப்பில் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் இவர் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷாவும் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின்னர் சிம்பு த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் படம் இதுதான்.

Simbu STR Simbu Throwback

சிம்பு எப்போதுமே, அதிகப்படியான விமர்சனங்களுக்கும் அதிகப்படியான சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத்தான் எந்த நடிகையுடனும் இவர் குறித்து எந்த விதமான கிசுகிசுக்களும் இல்லாமல் உள்ளது. மற்றபடி, இவரை எதாவது ஒரு நடிகையுடன் திரையுலகம் இணைத்து பேசிக்கொண்டுதான் இருந்தது. இதுமட்டும் இல்லாமல், கால்ஷீட் கொடுத்தால் படத்தில் வந்து சரியாக நடித்துக் கொடுக்கமாட்டார். இதுமட்டும் இல்லாமல், படப்பிடிப்புத் தளத்திற்கே வரமாட்டார். அவர் வீட்டு மொட்டை மாடியில் ஷூட்டிங் வைத்தால் கூட வந்து நடித்துக் கொடுக்கமாட்டார் என்றெல்லாம் விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது.

சிம்பு: மேலும் சிம்பு 2018 காலகட்டங்களில் மிகவும் உடல் பருமனுடன் காணப்பட்டார். இதனால் அவரால் சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியாமல் போனது. எனவே, தனது உடல் எடையைக் குறைக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சிம்பு, ஒருவழியாக, உடலைக் குறைத்தார். அதுதொடர்பான வீடியோக்களை வெளியிடவும் செய்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Simbu STR Simbu Throwback

சரக்கு: இந்நிலையில் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.தற்போது அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், இந்த மாதிரி எல்லாம் சரக்கு அடுச்சா கூட பேச முடியாது. இது அதுக்கும் மேல என கேப்சனும் இட்டுள்ளார். மேலும் அந்த விடியோவில் சிம்பு, "பயந்து ஒரு பயனும் இல்லை. நாமே பயமா மாறிடனும். அவ்வளவுதான். நாமே பயமா மாறிட்டா நாம எப்படி பயத்தைப் பார்த்து பயப்படுவோம்? நாமே பயம்தானே?

Simbu STR Simbu Throwback

நாமே பயம்: எடுத்துக்காட்டாக, நாம் வீட்டுக்கு வருகின்றோம், லைட் ஆஃப் ஆகிவிட்டது. இருட்டாக உள்ளது. ஒருமாதிரி பயமாக உள்ளது. பேய் வந்துவிடுமோ என பயப்படுவதை விட, நாமே இருட்டாக மாறிவிட்டால் அந்த பயம் போய்விடும். கண்களை மூடிக்கொண்டால் இருட்டாகத்தானே தெரியும். அப்படித் தெரியும்போது நாமே இருட்டாக மாறிவிடுவோம். அப்பறம் எப்படி பயம் வரும்?" என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலருக்கு புரிந்தும் பலருக்கும் புரியாமல் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெனாலி படத்தில் பயமயம் எனக் கூறுவார் அதுவே கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கும், இது அதுபோலத்தான் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X