தயாரிப்பாளர் சங்கத்திற்காக சம்பளமே இல்லாமல் நடிக்கும் சிம்பு!
சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் வரும் நிதி முழுக்க முழுக்க நலிவடைந்த தயாரிப்பாளர்களின் குடும்பத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கலன்று திரையில் வெளியாகி
மிகவும் கடினமான தருணங்களை கடந்து உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய படி செம ஆக்டிவாக மாறி இருக்கும் நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலன்று திரையில் வெளியாகி சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது ரசிகர்களும் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மாநாடு
அடுத்தடுத்த திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாக கூறி இருந்த சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் புயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். இந்த திரைப்படம் ஏற்கனவே பலமுறை தடைபட்டு இப்பொழுது முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸர் வெளியாகும்
பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதியம் 2.34 மணிக்கு மாநாடு படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் தமிழ், தெலுங்கு,மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்க முன்னணி நடிகர்களால் வெளியிடப்பட உள்ளது.

சம்பளம் வாங்காமல்
மாநாடு முடித்த கையோடு சிம்பு முதல் முறையாக கேங்க்ஸ்டர் டானாக நடிக்கும் பத்து தல படத்தையும் முடித்து விட்டு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசைகட்டி நடிக்க தயாராக இருக்க தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சம்பளம் வாங்காமல் படம் ஒன்றை நடித்துக் கொடுப்பதாகவும் சிம்புவின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட
மேலும் இந்த படத்தின் மூலம் வரும் நிதியானது சங்க வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் நலிவடைந்த தயாரிப்பாளர்களின் குடும்பத்திற்கு உதவும் நோக்கிலும் உருவாக்கப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் சிங்காரவேலன் இந்த திரைப்படத்தை தயாரிக்க, வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஞானகிரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் பாராட்டுக்களை
மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டே வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











