Maghaamaanaadu: மாநாடுக்கு போட்டியாக மகாமாநாடு படத்தை இயக்கி, நடிக்கும் சிம்பு
சென்னை: மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மகாமாநாடு என்கிற படத்தில் நடிக்கிறார் சிம்பு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு என்கிற அரசியல் படத்தில் நடிப்பார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் கால விரயம் காரணமாக மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்த சிம்பு மாநாடு படத்தில் நடிக்காமல் மஃப்டி ரீமேக்கில் நடிக்க சென்றதால் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சிம்பு மகாமாநாடு என்கிற படத்தை இயக்கி, நடிக்கப் போகிறாராம்.
மகாமாநாடு படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது.
முன்னதாக சிம்பு மன்மதன், வல்லவன் ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். மகாமாநாடு படத்தில் யார், யார் எல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
மகாமாநாடு படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு போனால் என்ன மகாமாநாடு வருகிறது. இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மட்டும் அல்ல கோலிவுட்காரர்களும் வியப்பில் உள்ளனர்.
மாநாடு படத்தை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு மகாமாநாட்டை துவங்குகிறார். எந்த மாநாடு முந்திக் கொண்டு ரிலீஸாகப் போகிறதோ?
எது எப்படியோ, தலைவன் மீண்டும் இயக்குநர் ஆகிவிட்டார் என்று சிம்பு ரசிகர்கள் குஷியாக உள்ளனர். சிம்பு மறுபடியும் வம்பு செய்கிறார், இயக்குநர்களை கதறவிடுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவரே ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











